உங்களின் கரியரை மாற்றுவது சாதாரண விஷயமல்ல.. கொஞ்சம் இதை படிங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய இளைஞர்களின் தங்களின் பணி வாழ்க்கையில் (Career life) ஒவ்வொரு நிகழ்விலும், அவர்கள் எதிர்பார்த்த சவால்/விறுவிறுப்பு, பணம் அல்லது தொழில் வளர்ச்சி ஏதாவது ஒன்று இல்லாமல் இருக்கிறது எனப் புலம்புகின்றனர்.

 

இந்தப் புலம்பலுக்கு அதிகரிக்கும் வகையில், கடந்த சில வாரங்களில் காக்னிசன்ட் 6,000 எஞ்சினியர்களையும், விப்ரோ 500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

நாஸ்காம் ஆண்டுத் திறனாய்வு கணித்தது போல் அடுத்த மூன்று வருடங்களில் ஐடி வேலைவாய்ப்புகள் 20-25% குறையும் என்பதற்குத் தகுந்தவாறு இருந்தது அந்த நிகழ்வு. மத்தி / மூத்த நிர்வாகிகள் வேலைகள் இழக்க நேரிடும் அவர்களில் 60-65% ஆட்கள் பயில்விப்பு தரன் இல்லாமல் இருப்பார்கள் என்பது கேப்ஜெமினி இந்தியா சி.ஈ.ஓ வின் கணிப்பு.

இந்தப் பாதிப்பு ஐடி துறையில் மட்டும் அல்ல, வங்கி, உற்பத்தி எனப் பல துறைகளில் தற்போது நிலவுகிறது. இதற்கு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்..? எப்படித் தங்களது கரியரை மாற்றிக் கொள்ளவது என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

கட்டாயத்தில் மக்கள்

கட்டாயத்தில் மக்கள்

இன்றைய நிவையில் அனைத்துத் துறைகளிலும் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பணிநீக்கம் ஆட்குறைப்புச் செய்யப்படும் காரணத்தால் பெரும்பாலான மக்கள் வேறு வேலை வாய்ப்புகளை நாட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உங்கள் துறையிலிருந்து வெளியேற்ற அல்லது வேறு காரணங்களுக்காக உங்கள் துறையிலேயே தேக்கம் காண்பவரா நீங்கள் ? உங்களுக்கு ஒரு பணி மாற்றம் ஏற்பட மேற்கொண்டு இக்கட்டுரையைப் படியுங்கள்

 

காரணம் என்ன?

காரணம் என்ன?

லிங்க்ட் இன் ஆய்வின் படி, இந்த வருடம் பணி மாற்றம் செய்த 7 மில்லியன் நபர்களில், மூன்றில் ஒருவர் துறையை மாற்றி உள்ளனர். நீங்களும் துறை மாற்றத்தைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தனியாக இல்லை.

அந்த மாற்றம் அடுத்தவரின் கருத்துகளைக் கேட்டு வராமல் உங்களின் விருப்பத்தின் பேரில் இருந்தால், உங்களால் ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

 

நீங்கள் ஏன் பணி மற்றம் செய்ய வேண்டும் ?
 

நீங்கள் ஏன் பணி மற்றம் செய்ய வேண்டும் ?

உங்கள் மேலதிகாரியை அல்லது பணி இடம் பிடிக்காமலோ, வேலையில் சலிப்பு ஏற்பட்டோ மாற்றம் வேண்டும் என்றால் அதே துறையில் வேறு வேலை தேடுங்கள், துறையையே மாற்ற நினைக்க வேண்டாம்.

ஆனால் உங்கள் துறையில் ஏற்பட்ட தேக்கம், உங்களின் திறன்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பின்மை அல்லது ஊதியத் தேக்கம் ஆகியவற்றினால் நீங்கள் மாற நினைத்தால் நீங்கள் சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள்.

 

 

தொலை நோக்குப்பார்வை

தொலை நோக்குப்பார்வை

உங்கள் காரணங்களின் அடிப்படையில், நீங்களே ஒரு தொலை நோக்குப்பார்வையுடன் உங்கள் எதிர்காலத்தை வரையறுங்கள். உதாரணமாக, நான் இலாபம் ஈட்டாத அரசு சாரா நிறுவனத்தில் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க வேண்டும். பின்னர் அதனை அளவிடக் குறிப்பிட்ட இலக்குகளாக வடிவமைக்கவும்.

ஆதரவு தேடுங்கள்

ஆதரவு தேடுங்கள்

வேலை வாய்ப்புகளில் மாற்றம் பயத்தைக் கொடுக்கும் அதுவும் வயதாக ஆக அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையின் பாதுகாப்பற்ற தன்மையைக் கையாள்வதுடன் நீங்கள் சந்திக்கும் அனைவரும் உங்களை ஆபத்திலிருந்து காப்பற்ற முற்படுவதாக நினைத்துச் செய்யும் செயல்கள் வேறு உங்களை ஏற்ற இறக்கங்கள் நிறைந்த உணர்ச்சிப்பாதையில் பயணிக்க வைக்கும்.

வழிகாட்டல் கண்டிப்பாகத் தேவை

வழிகாட்டல் கண்டிப்பாகத் தேவை

நீங்கள் உந்துதலுடன் இருக்க, உங்கள் தேர்வுகளை ஆதரிப்பவர்களை நாடுங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை நாடுவதுடன் உங்கள் சொந்த துறையில் இருந்து உங்களைப் போலவே வேறு துறைக்கு மாறியவர்களின் வழிகாட்டலை நாடுங்கள்.

நம் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும் மற்றும் உங்கள் குறிக்கோள் உங்களுக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தரும் என நம்புங்கள்.

 

நீங்கள் இப்போது எங்கே உள்ளீர்கள் ?

நீங்கள் இப்போது எங்கே உள்ளீர்கள் ?

நீங்கள் யாரென்பதையும் இப்போது உங்கள் பணி வாழ்வில் எங்கே உள்ளீர்கள் என்றும் கணக்கிடுங்கள். உங்கள் அனுபவங்கள் மற்றும் நீங்கள் இதுவரை ஈடுபட்ட வேலைத் திட்டங்கள் மற்றும் உங்கள் சாதனைகளைப் பட்டியலிடுங்கள்.

அத்திட்டங்களின் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட திறன்களைக் குறிப்பிடவும். முதலில் குறிப்பிட்ட திறமைகளையும் பின்னர்ப் பொதுவாகவும் பட்டியலிடுங்கள். உதாரணமாக-திட்டம் அறிக்கை எழுதுவது தொடர்பு திறன்களுக்குக் கீழ் வரும்.

இந்தப் பயிற்சி உலகிற்கு வழங்கவும் மற்றும் ஒரு புதிய வாழ்க்கை மாற்றத்திற்குத் திறன்களை அடையாளம் காணவும் உதவுகிறது. இறுதியாக, தொழில்முறை இணைப்பில் உள்ள சக ஊழியர்களின் சுயவிவரங்கள் மற்றும் தொழில் மாற்றம் செய்தவர்களின் விவரங்களையும் பாருங்கள். இது நீங்கள் தவறவிட்ட அல்லது தேவையான திறன்களை அறிய உதவும்.

 

என்ன சாத்தியம்?

என்ன சாத்தியம்?

நீங்கள் மாற்றம் நினைக்கும் போது உங்கள் மனதில் அந்த முதல் சில தொழில்களில் யாவை? உங்கள் முன்னாள் சகாக்கள் எங்கே சேர்ந்துள்ளனர்? உங்களுக்கு அத்துறைக்குத் தேவையான திறன்கள் இல்லாவிடிலும் உங்கள் கனவு வேலை வாய்ப்புகள் யாவை? அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்ட பின்னர் இதில் இருந்து மூன்று முதல் ஐந்து பணி விருப்பங்களைத் தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் எதில் திறன் மிக்கவர், எது உங்களுக்கு எழுச்சியூட்டும் எது மிகவும் முக்கியமானது என்ற அடிப்படையில் முடிவு செய்யுங்கள்.

 

இடைவெளியை அறியுங்கள்

இடைவெளியை அறியுங்கள்

உங்கள் இலக்கை அடைய இப்பொழுது என்ன உங்களிடம் இல்லை ? அது திறன்களா, தொடர்புடைய வெளிப்பாடா அல்லது நம்பிக்கை பற்றாக்குறையா?

இடைவெளி அடையாளம் கண்ட பிறகு இலக்கினை அடையச் சரியான விருப்பங்களைத் தேடுங்கள். . அனைத்து விருப்பங்களும் தன்னார்வம், ஆன்-தி-ஜாப் பயிற்சி (OJT) அல்லது கல்வி இம்மூன்றின் கீழ் வந்து விடும்.

 

ஆன்லைன் கல்வி

ஆன்லைன் கல்வி

கல்வியில், முறையான டிகிரி தவிரச் சரியான பாதை வகுக்க ஆன்லைன் படிப்புகள் நிறைய உள்ளன. தன்னார்வத்தைக் கருத்தில் கொண்டால், உங்கள் உற்சாகம் தற்போதைய திறமைகளை விட உங்களைப் பற்றி அதிகம் பேசும். தன்னார்வ மற்றும் ஆன்-தி-ஜாப் பயிற்சிக்கு இடையே உள்ள வேறுபாடு நீங்கள் ஒரு வேலையில் இருந்தால் உங்கள் திறமைகள் உங்களுக்கு ஒரு ஊதியத்தைப் பெற்றுத்தரும்..

விண்ணப்பம்

விண்ணப்பம்

விளம்பரத்தில் வரும் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். நீங்கள் இணையத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது வெளியிடப்பட்ட உங்கள் சுயவிவர அனுபவம் மற்ற விண்ணப்பதாரர்களுடன் ஒப்பிடப்பட்டு உங்களைப் பற்றிய ஒரு கருத்து முத்திரை இடப்பட்டுவிடும். மாறாக உங்கள் இலக்கு என்னவோ அந்தத் தொழில் நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரில் செல்லுங்கள்.

 இரட்டை நன்மைகள்

இரட்டை நன்மைகள்

இதில் இரட்டை நன்மைகள் உண்டு. முதலாவதாக, நீங்கள் முயல்கின்ற பணியைப் பற்றி மேலும் நிறையக் கற்று சிறந்த தேர்வுகளைச் செய்ய முடியும். இரண்டாவதாக அனைத்துப் பணி காலியிடங்களில் 70% விளம்பரப்படுத்த படுவதேயில்லை. அந்நிறுவனத்தில் வேலை செய்பவர்களால் மட்டுமே அறியப்படுகிற அந்த விவரங்களை நீங்கள் நேரில் சென்றால்தான் பெறமுடியும்.

இப்போதே செயல்படுங்கள்

இப்போதே செயல்படுங்கள்

பெரும்பாலான மக்கள் வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் தேவையில்லாது பகுப்பாய்வு செய்து அதிகம் சிந்தித்துச் செயலில் ஈடுபட மாட்டார்கள்.

நீங்கள் இப்போது பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் அதே சமயம் தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பணி மாற்றத்திற்குத் தொடர்புடைய செயலில் ஈடுபடுங்கள்.

சரியான நபர்களைச் சந்திப்பது, உங்கள் தகுதிக்குறிப்பை புதிய துறைக்கு ஏற்றாற்போல் மேம்படுத்துவது போன்றவற்றைச் செய்த உடன் உங்களுக்கு ஏற்றத் துறையைக் கண்டுபிடித்துத் தேர்ந்தெடுக்கப் போதுமான கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

செயல் திட்டம்

செயல் திட்டம்

வாரம் 1

எழுதவும்: வேலைகள் மாற்றத்திற்குக் காரணங்கள் மற்றும் நீங்கள் எங்கே போக வேண்டும் எனப் பட்டியலிடவும்.. வாரம், மாதம், 3 மற்றும் 6 மாதங்களுக்கான இலக்குகளைக் குறிப்பிடவும். உங்கள் தகுதிக்குறிப்பை தயார் செய்யவும். எழுதுவது உங்கள் சிந்தனையைத் தெளிவு படுத்தி உங்களைச் செயல்பட வைக்கும்

 

வாரம் 2

வாரம் 2

நிதி திட்டமிடல்: உங்கள் கையிருப்பு மற்றும் கடன்கள்.. அந்த. இரண்டும் நீங்கள் துணிந்து எவ்வளவு காலம் புதிய பணிகளைத் தேடலாம் என்று முடிவெடுக்க வைக்கும்

வாரம் 3

வாரம் 3

வழிகாட்டல் காணவும்: நீங்கள் தேர்ந்தெடுத்த தொழில் வாழ்க்கை குறித்து அனைத்து விதமான ஆய்வுகளையும் செய்யுங்கள். இணையத்தில் ஆய்வு செய்வதைத் தவிரவும் ஆலோசனை தரக்கூடியவர்களைச் சந்தியுங்கள். உங்கள் துறையில் இருந்து நீங்கள் போக விரும்பும் துறைக்குச் சென்றவர்களைச் சந்தித்துப் பேசுங்கள்.

வாரம் 4- 6

வாரம் 4- 6

வேலையில் அமர்த்துபவர்களைச் சந்தியுங்கள் : நீங்கள் வேலை வேண்டும் என நினைக்கும் நிறுவனங்களில் முடிவெடுப்பவர்கள் மற்றும் பணியாளர்களிடம் பேசுங்கள். வேலைவாய்ப்பு முகவர்கள், சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் அவர்களை நாடுங்கள். எல்லா வாய்ப்புகளையும் உங்களைப் பற்றித் தெரிவிக்கப் பயன் படுத்துங்கள்.

வாரம் 7-12

வாரம் 7-12

நீங்கள் கற்று கொண்டதைச் சரிபார்த்து, நீங்கள் எங்குச் செல்ல வேண்டும் எந்தப்பாதையில் பயணிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணஓட்டங்களை ஆய்வு செய்யுங்கள். திறனில் குறைவு இருந்தால், அதனை முறையான கல்வி, இன்டர்ன்ஷிப் அல்லது தன்னார்வத்தைக் கொண்டு அதை மறைக்க வேண்டுமா ? மீண்டும் வேலையில் அமர்த்துபவர்களைச் சந்தியுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to change career successfully

How to change career successfully - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X