கொள்ளை மற்றும் திருட்டு காப்பீட்டு பற்றித் தெரியுமா உங்களுக்கு..? அதன் பயன்கள் என்ன..?

கொள்ளை மற்றும் திருட்டு காப்பீட்டுத் திட்டம் என்பது திருட்டு அல்லது வீடு உடைப்புக் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு நிதி இழப்பீட்டை வழங்கும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.

நீங்கள் விடுமுறையில் உங்கள் குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்லும் போதும், இதர நகரங்களில் வசித்து வரும் உங்கள் உறவினர்களைப் பார்த்து வரச் செல்லும் போதும், உங்கள் வீடு மற்றும் வீட்டிற்குள் உள்ள விலையுயர்ந்த பொருட்களின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுகிறீர்களா?

அல்லது நீங்கள் சொந்தமாக வணிக வளாகத்தை வைத்துள்ள ஒரு வியாபாரியாக இருந்தால், உங்கள் வணிக வளாகத்திலுள்ள மரச்சாமான்கள் மற்றும் சரக்கிருப்புப் பொருட்கள் சேதமடைந்து விடும் அல்லது கொள்ளையர்களால் திருடப்பட்டு விடும் என்று நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு வீட்டில் தூங்காமல் இரவுகளைக் கழிக்கிறீர்களா?

அப்படி நீங்கள் கவலைப்படுபவராக இருந்தால், நீங்கள் கொள்ளை காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது பற்றி யோசிக்க வேண்டும்.

டென்ஷன் ப்ரீ

டென்ஷன் ப்ரீ

கொள்ளை மற்றும் திருட்டுக் காப்பீட்டை வாங்கிவிட்டால் பின்னர் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வெளியூர்களுக்குப் பயணித்து முழுமையாக ஓய்வெடுக்கலாம் மேலும் உங்கள் குடும்பத்துடன் விடுமுறையில் வெளியூர்களுக்குச் சென்று மன அமைதியுடன் கழிக்கலாம்.

இழப்பீடு

இழப்பீடு

கொள்ளை காப்பீட்டுத் திட்டத்தில் திருட்டினால் அல்லது வீட்டு உடைப்பினால் சொத்துக்களுக்கோ அல்லது விலைமதிப்புள்ள பொருட்களுக்கோ இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால் நிதி இழப்பீடு அளிக்கப்படுகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டம் பின்வருவனவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது:

முக்கியப் பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

* பணம், நகைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட பூட்டப்பட்ட அலமாரியில் வைக்கப்பட்ட விலையுயர்ந்த உடைமைகள் ஆகியவற்றிற்குக் காப்பீடளிக்கிறது.

* உண்மையில் திருட்டினால் அல்லது கொள்ளை மற்றும் வீடு உடைப்பு முயற்சியினால் சொத்து மற்றும் சுற்றுப்புறங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குக் காப்பீடளிக்கிறது.

* வியாபார வளாகத்தில் கொள்ளை நடந்து இருந்தால், வணிக வளாகத்தின் சுற்றுப்புறங்களுக்குள் மரச்சாமான்கள், சரக்கிருப்பு மற்றும் இதர சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடளிக்கிறது.

 

நிதி இழப்பீடு

நிதி இழப்பீடு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் எவையேனும் திருடப்பட்டால் அல்லது கொள்ளை அல்லது வீட்டு உடைப்பு முயற்சியில் சேதமடைந்தால் இந்தக் கொள்ளை காப்பீட்டுத் திட்டமானது காப்பீட்டுதாரருக்கு நிதி இழப்பீட்டை செலுத்தும்.

இருந்தாலும் இந்தத் திட்டம் காப்பளிக்காத சில விலக்குகளும் உண்டு. அந்த விலக்குகளாவன,

 

விலக்கு

விலக்கு

காப்பீட்டுதாரரிடம் வேலை செய்யும் பணியாட்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படும் திருட்டு, தீ விபத்து மற்றும் இதர அபாயங்களின் போது நடக்கும் கொள்ளைகள், போரினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம், கலகங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களின் போது நடக்கும் இழப்புகள், தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடன் ஏற்படுத்தப்படும் இழப்பு அல்லது சேதங்கள், சுங்கத்துறை மற்றும் மாநகர அதிகாரிகளால் செய்யப்படும் பொருட்களின் பறிமுதல் போன்ற மற்றும் பல இதில் அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+