கருப்பு பண முதலைகளைக் கட்டம்கட்டி தூக்க தயாராகும் வருமான வரித்துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய்ப் பயன்படுத்த தடைவிதித்த காலத்தில் கருப்பு பண முதலைகளைப் பலர் தங்களிடம் இருக்கும் பல கோடி ரூபாய் தொகையில் பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் குவித்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் பல கருப்பு பண ஆசாமிகள் அளவிற்கு அதிகமான தொகையை வங்கியில் வைப்பு செய்துள்ளனர்.

 

இவர்களைத் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்ய வருமான வரித்துறை புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது, அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது .

வருமான வரித் துறை

வருமான வரித் துறை

இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் அதிக விலைமதிப்புடைய கார், வீடு, நிலம், தங்கம் எனப் பலவற்றைக் கருப்பு பண ஆசாமிகள் வாங்கியுள்ளனர். இவர்களைத் தனியாகக் கவனிப்பில் முழுமையாக விசாரணை செய்யவும், தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்களிடம் தக்க பதில்களைப் பெற தனிப்பட்ட இணையத் தளத்தை உருவாக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

கடந்த வாரம் வருவாய் துறை அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போதும் இதுக்குறித்து ஆலோசனை செய்துள்ளனர்.

வருமான வரித்துறையின் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்கான பணிகள் அடுத்தச் சில நாட்களில் துவங்கப்படும் எனவும் வருவாய் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இணையத் தளம்
 

இணையத் தளம்

இந்த இணையதளக் கருப்புப் பணம் குறித்துச் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் வருமான வரித் துறை மத்தியில் மட்டும் இயங்க கூடிய ஒன்று. மேலும் இது முழுமையாகப் பான் கார்ட் இணைப்பின் வாயிலாக நடைபெற உள்ளது.

மேலும் முழுமையாகத் தகவல்களைப் பெறும் வகையில் எளிமையான விளக்கம் அளிக்கும் வகையில் படிவங்கள் உருவாக்கப்பட்டு, அதிகாரிகளுடன் ஆசாமிகள் இணைப்பை தடுக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

60,000 பேர்

60,000 பேர்

இந்த இணையதளம் மூலம் விசாரணை செய்ய வருமான வரித்துறை இந்தியா முழுவதும் சுமார் 60,000 பேரை பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கருப்பு பண ஆசாமிகள் அதிகமானோர் வெளியில் வருவார்கள் எனத் தெரிகிறது.

எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில்

எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில்

இந்தியாவில் இதுவரை கருப்புப் பணம் குறித்து மத்திய அரசு அறிமுகம் செய்த பிரதான் கரிப் கல்யாண் யோஜ்னா திட்டம் குறித்துச் சுமார் 18 லட்சம் பேர் எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் விளக்கம் அளித்தும் கேட்டும் உள்ளனர் என்று வருவாய் துறை தெரிவித்துள்ளது.

இது என்னபா புதுத் திட்டமா இருக்கு..??

பிரதான் கரிப் கல்யாண் யோஜ்னா

பிரதான் கரிப் கல்யாண் யோஜ்னா

கருப்புப் பணம் அதாவது கணக்கில் காட்டப்படாத பணத்தை 45 சதவீத வரியாக ஒப்படைக்கவும், இதன் மூலம் எவ்விதமான வழக்கம், தண்டனையும் பெறப்படாது என மத்திய அரசு இந்தியாவில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்கும் முயற்சியில் Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) என்ற சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட தனிநபர் மற்றும் நிறுவனங்கள் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மத்திய அரசின் இச்சிறப்புத் திட்டத்தில் இணைந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 10

ஏப்ரல் 10

PMGKY திட்டத்தின் இணைய வரும்புவோருக்கு கடைசி நாள் மார்ச் 31 என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மத்திய அரசு ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது

1,000 கோடி ரூபாய்

1,000 கோடி ரூபாய்

தற்போதைய நிலையில் இத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பணத்தில் அளவு 1,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், இத்திட்டத்தில் சேராதவர்கள் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையின் சூட்டை ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து உணர்வார்கள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மோசடி ஆசாமிகளுக்கு செக்..!

மோசடி ஆசாமிகளுக்கு செக்..!

மோடியின் திட்டம் வேலை செய்கிறது.. மோசடி ஆசாமிகளுக்குச் செக்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CBDT developing a dedicated portal to investigate black money holders

CBDT developing a dedicated portal to investigate black money holders
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X