இண்டிகோ நிறுவனத்தின் கோடைக்கால விற்பனை.. ரூ. 899ல் விமான பயணம்..!
இந்தியாவில் பட்ஜெட் விமானச் சேவை அளித்து இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் கோடைக்கால விற்பனையாக 899 ரூபாய்க்கு விமான டிக்கெட்டினை அறிவித்துள்ளது.
குர்கானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இண்டிகோ விமான நிறுவனம் ஜூன் மாதம் முதல் 18 புதிய வழித்தடங்களில் விமானச் சேவை அளிக்க இருப்பதாக அன்மையில் அறிவித்தது.
சலுகை காலம்
இண்டிகோ நிறுவனத்தில் இந்தச் சலுகை விலையில் மே 10-ம் தேதி வரை விமான டிக்கெட்டினை புக் செய்து ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பயணம் செய்யலாம்.
இண்டிகோவின் இந்தச் சலுகை ஆஃபர் பயணத்திற்கு 20 நாட்கள் முன்பே முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
899 ரூபாய் டிக்கெட்
இண்டிகோ விமானத்தில் 899 ரூபாய் கட்டணத்தில் பாக்தோகிறா-குவஹாத்தி வழித்தடத்தில் மட்டும் பயணம் செய்ய முடியும்.
சென்னை விமான ஆஃபர்கள்
சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 999 ரூபாயும், சென்னையில் இருந்து கோயன்புத்தூர் செல்ல 1,099 ரூபாயும், சென்னையில் இருந்து விஷகபட்டிணம் செல்ல 1,099 ரூபாயும் விமான டிக்கெட்களாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பிற வழித்தடங்கள்
டெல்லி-ஜெய்ப்பூர் செல்ல 1,099 ரூபாயும், கோவாவில் இருந்து பெங்களூரு செல்ல 1,099 ரூபாயும், டெல்லியில் இருந்து டேராடூன் செல்ல 1,299 ரூபாயும் விமான டிக்கெட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம்
இந்தியாவின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ 39.9 சதவீத சந்தையைத் தன் வசம் வைத்துள்ளது. தற்போது இண்டிகோ நிறுவனம் 39 உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் 7 வெளிநாட்டு விமான நிலையங்களுக்குத் தனது சேவையை அளிக்கின்றது.


Click it and Unblock the Notifications