ஏர்டெல் நிறுவனத்தின் 'இந்த' மோசமான நிலைக்குக் காரணம் ஜியோ..!
மும்பை: நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவன ஏர்டெல், ஜியோ உடனான போட்டியில் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காகத் தனது சேவையின் கட்டணத்தைக் குறைத்து ஜியோவிற்கு இணையான விலையை அறிவித்தது.
இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்தார்களோ இல்லையோ, 4 வருடத்தில் மோசமான காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளனர்.
பார்தி ஏர்டெல்
மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் பார்தி ஏர்செல் நிறுவனத்தின் லாப அளவீடுகள் சுமார் 72 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் முழ்க செய்தது.
கடந்த வருடம் அதே காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 1,319.2 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற நிலையில் மார்ச் மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் வெறும் 373.4 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது.
கணிப்புகள்
சந்தையில் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த சந்தை ஆய்வாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் காலாண்டின் லாபம் 542 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணித்திருந்தது.
ஆனால் கணிப்புகளை விடவும் மிகவும் குறைவான அளவிலேயே லாபத்தைப் பெற்றுள்ளது ஏர்டெல்.
55 சதவீதம் சரிவு
இந்நிலையில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 55 சதவீதம் வரை சரிந்ததை அடுத்து. தொடர்ந்து 2 காலாண்டுகளாக மிகப்பெரிய அளவில் லாபத்தை இழந்து வருகிறது.
வருவாய் இழப்பு
2017ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் (மார்ச் 31) ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவு 12 சதவீதம் குறைந்து 21,934.6 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
வருவாய் 12 சதவீதம் மட்டுமே சந்துள்ள நிலையில், லாபம் 72 சதவீதம் சரிந்துள்ளது.
வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருமானம்
ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி மாத வருமானம் 194 ரூபாயில் இருந்து தற்போது 158 ரூபாயாகக் குறைந்துள்ளது.
டேட்டா சேவை மூலம் கிடைக்கும் வருமானமும் 196 ரூபாயில் இருந்து 162 ரூபாயாகக் குறைந்துள்ளது.
நான்கு வருடம்
கடந்த 4 வருடத்தில் இதுவே மிகவும் குறைந்த லாபத்தை அடைந்த காலாண்டு என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏர்டெல் மீது முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யும் அளவிற்குத் தற்போது ஏர்டெல் நிறுவனம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
டெலிநார்
மேலும் சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் டெலிநார் நிறுவனத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications