இந்தியா கைவிட்டாலும், ஆப்ரிக்கா காப்பாற்றியது.. ஏர்டெல்-க்கு கிடைத்த புதிய சந்தை..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய டெலிகாம் வர்த்தகப் பிரிவான ஜியோவின் மலிவான கட்டண சேவைகளுக்கு எதிராக ஏர்டெல் தனது கட்டணத்தை அதிகளவில் குறைந்தது.
இதனால் டிசம்பர் காலாண்டில் 55 சதவீதமும், மார்ச் காலாண்டில் 72 சதவீதம் அளவிற்கு ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய பங்குச்சந்தையில் ஏர்டெல் நிறுவனப் பங்குகள் அதிகளவில் சரியும் என எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 10.18 சதவீதம் வரை உயர்ந்தது. இதற்கு என்ன காரணம்..?
ஏர்டெல் நிறுவனம் 2010ஆம் ஆண்டுத் தனது டெலிகாம் சேவையை ஆப்பிரிக்காவில் துவங்கியது, அன்று முதல் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வந்த ஏர்டெல் முதல் முறையாக லாபத்தைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாகவே ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் இன்று உயர்வடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications