ஆரக்கிள் நிறுவனத்தின் புதிய டேட்டா சென்டர்.. அதுவும் 6 மாதத்தில் வருகிறது..!
அமெரிக்கத் தொழில்நுட்ப சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஆரக்கிள், அடுத்த 6 மாதத்தில் இந்தியாவில் தனது புதிய டேட்டா சென்டரை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது இந்தியா ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து வெளியேற்றி வரும் நிலையில் இந்த அறிவிப்பு ஐடி ஊழியர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
என்ன காரணம்..?
டேட்டா சென்டர்
ஆரக்கிள் போன்ற பெரிய நிறுவனங்கள் டேட்டா சென்டரை துவங்கினால் பல ஆயிரம் வாடிக்கையாளர்களையும், பல பிராந்திய சந்தைகளின் வர்த்தகத்தைச் சமாளிக்கும் அளவிற்குப் பெரியதாக இருக்கும்.
இத்தகைய பெரிய டேட்டா சென்டரில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதால், இது உண்மையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு.
சாப்ரா கேட்ஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்று விசா கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கிய போதே, ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் டேட்டா சென்டரை அமைக்க முடிவு செய்துவிட்டது.
ஆனால் இந்த முடிவு உறுதியாகமல் இருந்த நிலையில், ஆரக்கிள் நிறுவனத்தின் சிஇஓ-வான சாப்ரா கேட்ஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார், தற்போது இதுக்குறித்த உறுதியான செய்திகளை அறிவித்தார் கேட்ஸ்.
இந்திய அரசு
இதுக்குறித்து ஆரக்கிள் வெளியிட்ட செய்தியில், அடுத்து வரும் மாதங்களில் இந்திய அரசுடனும், கூட்டணி நிறுவனங்களுடனும், இந்தியாவில் அமைக்கப்பட உள்ள கிளவுட் சேவையில் எப்படி அமைப்பது, வொர்க்லோடை எப்படி இடம்பெயர்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
என்ன லாபம்..?
இந்தியாவில் டேட்டா சென்டர் அமைப்பதன் மூலம் ஆரக்கிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குக் குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை அளிக்க முடியும். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களையும் கவர முடியும்.
காரணம் இந்தியாவில் செலவுகள் மிகவும் குறைவு.
முதலீடு
37 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆரக்கிள் நிறுவனம் இந்தியா சந்தையில் செய்யப்படும் முதலீடு குறித்து எவ்விதமான தகவல்களையும் அறிவிக்கவில்லை.
பெங்களுரா..? சென்னையா..?
ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் தயாரிப்பு தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் அமைக்கத் திட்டமிட்டு பல்வேறு காரணங்களுக்காகப் பெங்களுரில் அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஆரக்கிள் தனது புதிய டேட்டா சென்டரை எங்கு அமைக்கபோகிறது என்ற கேள்வி எழுகிறது.
மேலும் கடந்த வருடமம் ஆரக்கிள் நிறுவனம் தனது பெங்களுரூ அலுவலகத்தை 400 மில்லியன் டாலர் முதலீடுடன் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications