டெல்லி: ஜியோ நிறுவனத்தின் குறைவான கட்டணத்திற்குப் போட்டியாக ஏர்டெல் தனது டேட்டா முதல் வாய்ஸ் கால் வரையிலான அனைத்துச் சேவைகளின் கட்டணத்தையும் குறைத்த நிலையில், ஏர்டெல் கடந்த இரண்டு காலாண்டுகளாகத் தொடர்ந்து வருவாய் சரிவை சந்தித்தது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது மத்திய அரசிடம் வரிச் சலுகையும், ஸ்பெக்ட்ரம் பெற்றதாற்கன பணத்தை அளித்த கூடுதல் கால அவகாசத்தைக் கோரியுள்ளது.
கடைசில இப்படி ஆயிடுச்சே கோபால்..!
ஏர்டெல்
இந்திய டெலிகாம் சந்தை தற்போது மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. இதற்குச் சரியான தீர்வு வேண்டும் என ஏர்டெல் இந்தியா மற்றும் தென் ஆசிய சந்தையின் சிஇஓ கோபால் விட்டல், நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின் தெரிவித்தார்.
அதிகப்படியான வரி
டெலிகாம் நிறுவனங்களுக்கு அதிகப்படியான வரி மற்றும் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றது. மத்திய அரசுக்கு ஒரு டெலிகாம் நிறுவனம் உரிமம் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் எனத் தொடர்ந்து பல கட்டணங்களையும் வரியையும் செலுத்த வேண்டியுள்ளது.
கூடுதல் அவகாசம்
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசிடம் வரி மற்றும் கட்டணத்தில் சலுகை மட்டும் அல்லாமல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்கான பணத்தைச் செலுத்த கூடுதல் அவகாசத்தையும் கோரியுள்ளது.
நிதி நெருக்கடி
ஜியோவின் அறிமுகத்தால் டெலிகாம் நிறுவனங்கள் அறிவிக்கக் கட்டண குறைப்பு மூலம் பல டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் உள்ளது.
மாற்றம்
ஜியோ அறிமுகத்திற்குப் பின், ஏர்டெல் தனது கட்டணத்தை 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்தது, முன்னணி நிறுவனங்களாக இருக்கும் வோடபோன் மற்றும் ஐடியா ஆகியவை இணைய முடிவு செய்து விட்டது.
இதனால் ஒட்டுமொத்த டெலிகாம் நிறுவனமே ஆடிப்போய் உள்ளது.
மத்திய அரசு
ஏர்டெல் இந்தியாவின் சிஇஓ கோபால் விட்டலின் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை. மேலும் டெலிகாம் துறையில் இருக்கும் பிற நிறுவனங்களும் இத்தகைய கோரிக்கையை இதுவரை எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications