ஆயுள் காப்பீடு என்றாலே நம்மள சாகச் சொல்றான்யா என்று தூரம் ஓடியவர்கள் எல்லாம் இன்றைய நவீன உலகின் ஆபத்துக்களை உணர்ந்த பின்னர் அவர்களாகவே தேடி வந்து இத்திட்டத்தில் சேரும் நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது.
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான பாலிசிகள்
1. குறிப்பிடக் கால முதிர்வுக்குப் பின்னர் வழங்கப்படும் எண்டோவ்மென்ட் பாலிசி
2. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பகுதியாகச் சேமிப்பினை திரும்பப்பெறும் மணிபேக் திட்டம்
3. குறிப்பிட்ட கால முதிர்வுக்குப் பின்னர் மாதம் ஒரு தொகை ஓய்வூதியமாக வழங்குதல் போன்ற பல்வேறு வகைகளில் நடைமுறையில் உள்ளது.
காப்பீடு மற்றும் சேமிப்பு
எண்டோவ்மென்ட் பாலிசி என்பது காலவரை ஈட்டுறுதி திட்டம் அல்லது கொடை காப்பீட்டுத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இத்திட்டம் ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு என இரட்டை ஆதாயங்களைக் கொண்டதாகும்.
முதிர்வுத் தொகை
இத்திட்டத்தில் பாலிசிதாரர் ஒருவர் செலுத்தும் மாதாந்திர தொகை குறிப்பிட்ட காலங்கள் முடிந்தபின் அவர் செலுத்திய தொகை மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போனஸ் இரண்டும் சேர்த்து முதிர்வுத் தொகையாக வழங்கப்படுவதாகும்.
பாலிசிதாரர் இறப்பு
பாலிசிதாரர் திடீரென இறக்க நேரிட்டால் நிறுவனம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட முதிர்வுத் தொகை அவரின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும். அல்லது பாலிசி இடையில் முடித்துக் கொள்ளப்பட்டால் அதுவரை பாலிசிதாரர் செலுத்திய தொகை மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து நிர்வாகச் செலவினம் கழித்துக் கொள்ளப்பட்டு மீதமுள்ள தொகை பாலிசிதாரருக்கு காசோலையாகவோ அல்லது அவரது வங்கிக் கணக்கிலோ சேர்க்கப்படும்.
கல்வி முதல் வீடு வரை
எண்டோவ்மென்ட் பாலிசியானது பிள்ளைகளின் கல்வி, திருமணம், புதிய வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் ஆகியவற்றுக்கான திடங்களையும் உள்ளடக்கியதாகும். பாலிசிதாரர் திடீரென இறக்கும் நிகழ்வுகளில் அவரது குடும்பம் சந்திக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை அளிக்கக்கூடிய அருமருந்து இந்தக் காப்பீட்டுப் பாலிசிகள். சில நேரங்களில் பாலிசிதாரர் எதிர்பாராத விபத்துகளில் சிக்கி காயமடையும் நிகழ்வுகளில் பாதிப்புகளின் தன்மைக்கேற்ப சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் தொகை அவருக்கு வழங்கப்பட்டு அவருக்கு ஆறுதலும் இடைக்கால நிவாரணமும் அளிக்கப்படும்.
லாபம் மற்றும் லாபம் இல்லா வகை
எண்டோவ்மென்ட் பாலிசிகள் லாபத்துடன் கூடியவை மற்றும் லாபமில்லாதவை என இரு வகைப்படும். இவை மேலும் முழு ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம், பிள்ளைகளின் கல்வி எனப் பல உட்பிரிவுகளைக் கொண்டதாக விரிகிறது. ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பம், மாத வருமானம், தேவைகள், அப்போதைய வாழ்க்கை நிலை, ஆபத்துக்களை எதிர்கொள்ளும் நிலை ஆகியவற்றைப் பொறுத்துப் பாலிசிகள் பல்வேறு வகையாக உள்ளன. மேலும், மாதாந்திர பிரீமியம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு அளவிலான போனஸ் ஆகியவற்றின் அடிப்படையிலும் பாலிசிகள் நுகர்வோரால் கொள்முதல் செய்யப்படுகின்றன.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications