வாடிக்கையாளர்களை ஓட ஓட விரட்டும் எஸ்பிஐ.. ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் கட்டணம்..!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பயன்படுத்தி ஒரு முறை பணம் எடுத்தாலும் ஜூன் 1 முதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே குறைந்தபட்ச வைப்புத் தொகை 5,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்த நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகள் பயன்படுத்தி ஒரு முறை பணம் எடுத்தாலும் கட்டணம் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 ரூபாய் கட்டணம்

25 ரூபாய் கட்டணம்

ஏடிஎம் பயன்படுத்திப் பணம் எடுக்கும் அனைத்து முறைகளுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ரூபே கார்டுகளுக்கு இலவசம்

ரூபே கார்டுகளுக்கு இலவசம்

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் எஸ்பிஐ ஏடிஎம்/டெபிட் கார்டுகள் ரூபே கார்டுகளாக இருந்தால் 25 ரூபாய் கட்டணம் கிடையாது. இதுவே விசா, மாஸ்ட்ர் போன்ற கார்டுகளாக இருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும்.

எதனால் ரூபே கார்டுகளுக்குக் கட்டணம் கிடையாது?

எதனால் ரூபே கார்டுகளுக்குக் கட்டணம் கிடையாது?

மாஸ்டர், விசா போன்ற கார்டுகள் வெளிநாட்டுச் சேவை வழங்கும் கார்டுகளாகும். ரூபே இந்திய அரசு வழங்கும் டெபிட் கார்டுகள் சேவை ஆகும். விசா கார்டுகள் போன்றவற்றில் பணப் பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே ரூபே டெபிட் கார்டாக இருப்பின் கட்டணம் இந்திய அரசுக்குச் செல்லும்.

கேஷ் டெபாசிட் கட்டணம்

கேஷ் டெபாசிட் கட்டணம்

வங்கிகள் சென்று கேஷ் டெபாசிட் செய்யும் போது 10,000 ரூபாய் வரையிலான கேஷ் டெபாசிட்டுக்கு 0.25 சதவீதம் அதாவது குறைந்த பட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சம் 8 ரூபாய் உடன் சேவை வரி கட்டணமும் செலுத்த வேண்டும்.

வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப் பெறுதல்

வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப் பெறுதல்

வங்கி கணக்கில் உள்ள பணத்தை வங்கியில் இருந்து திருப்பி எடுக்கும் போது 2,000 ரூபாய் முதல் 2.50 சதவீதம் பரிவர்த்தனை கட்டணமாக வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணமாக 6 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இணையதளப் பணப் பரிவர்த்தனை கட்டணம்

இணையதளப் பணப் பரிவர்த்தனை கட்டணம்

இணையதள வங்கி மூலமாக ஐம்பிஎஸ்(IMPS) பணப் பரிவர்த்தனை/யூபிஐ(UPI)/IUSSD போன்றவற்றைச் செய்யும் போது 1 லட்சம் ரூபாய் வரை 5 ரூபாய் உடன் சேவை வரிக் கட்டணம் வசூலிக்கப்படும்.1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது 15 ரூபாய் உடன் சேவை வரிக் கட்டணம், 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பரிவருத்தனை செய்யும் போது 25 ரூபாய் உடன் சேவை வரிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

சேதமடைந்த ரூபாய் நோட்டுகள்

சேதமடைந்த ரூபாய் நோட்டுகள்

20 எண்ணிக்கைக் கொண்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் அதன் மதிப்பு 5,000 ரூபாய் வரை இருந்தால் கட்டணம் ஏதும் இல்லாமல் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். 20 எண்ணிக்கைக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் என்றால் ஒவ்வொரு நோட்டிற்கும் 2 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

5,000 ரூபாய்க்கும் அதிகமான நோட்டுகள் ஒவ்வொன்றுக்கும் 2 ரூபாய் மற்றும் கூடுதலான ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 5 ரூபாய் உடன் சேவைக் வரி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

 

செக் புக்

செக் புக்

10 செக் கொண்டு புக்குகள் வாங்க 30 ரூபாய் மற்றும் சேவை கட்டணம் செலுத்த வேண்டும், 25 செக் கொண்ட புக்குகளுக்கு 75 ரூபாய் உடன் சேவை வரிக் கட்டணம், இதுவே 50 செக் கொண்ட புக்குகளுக்கு 150 ரூபாய் உடன் சேவை வரிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

எப்போது முதல் இந்தக் கட்டணம் அமலுக்கு வருகின்றது?

எப்போது முதல் இந்தக் கட்டணம் அமலுக்கு வருகின்றது?

எஸ்பிஐ அறிமுகப்படுத்தும் இந்தப் புதிய சேவைக் கட்டணங்கள் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

மக்கள் பணத்தை விழுங்கும் எஸ்பிஐ வங்கி.. நிதியமைச்சகமும், மத்திய அரசும் என்ன செய்கிறது..?

மக்கள் பணத்தை விழுங்கும் எஸ்பிஐ வங்கி.. நிதியமைச்சகமும், மத்திய அரசும் என்ன செய்கிறது..?

எஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை..!

எஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் குறைந்தபட்ச வைப்பு தொகை தேவையில்லை..!

மினிமம் பேலன்ஸ் 5,000 ரூபாய்..! இல்லை என்றால் அபராதம், வாடிக்கையாளர்களை மிரட்டும் எஸ்பிஐ..!

மினிமம் பேலன்ஸ் 5,000 ரூபாய்..! இல்லை என்றால் அபராதம், வாடிக்கையாளர்களை மிரட்டும் எஸ்பிஐ..!

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+