இந்திய மென்பொருள் வர்த்தகச் சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய முடிவு செய்து அதற்காகன பணிகளைத் துவங்கிய நிலையில், டெக் மஹிந்திரா இக்கூட்டணியில் சேர்ந்துள்ளது.
ஊழியர்களின் பணிநீக்கம் குறித்து டெக் மஹிந்திரா, விப்ரோ, காக்னிசென்ட் போல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் மறைமுகமாகக் கடந்த ஆண்டுக்கான செயல்திறன் அடிப்படையில் 1.2 சதவீதம் அதாவது 1,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய டெக் மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
டெக் மஹிந்திரா
இந்தியாவின் 5வது பெரிய நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா 90 நாடுகளில் பல ஆயிரம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது.
ஆயினும் இந்நிறுவனத்தின் அதிகப்படியான ஊழியர்கள் எண்ணிக்கை இந்தியாவில் மட்டுமே உள்ளது. அடுத்தச் சில நாட்களில் 4வது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள டெக் மஹிந்திரா-விண் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள், இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்யம் கம்பியூட்டர்ஸ்
ஆட்டோமொபைல் துறையில் கொடிகட்டி பறக்கும் மஹிந்திரா குழுமம், ஊழலில் சிக்கிக்கொண்ட சத்யம் கம்பியூட்டர்ஸ்-ஐ கைப்பற்றியதன் மூலம் மென்பொருள் சேவையில் களமிறங்கியது.
இதன் பின் சில சரிவுகள் ஏற்பட்டாலும், வர்த்தகத்தில் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 1,17,095 ஆக உள்ளது.
பணிநீக்கம்
காக்னிசென்ட், இன்போசிஸ் போன்று எந்தப் பிரிவு ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என டெக் மஹிந்திரா ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
ஆனால் மோசமான செயல்திறன் கொண்டு ஊழியர்கள் அதிகளவில் வெளியேறுவது நிச்சயம் என்று டெக் மஹிந்திரா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு
எப்போதும் மார்ச் மாதத்திலேயே சம்பள உயர்வை அளிக்கும் டெக் மஹிந்திரா இந்த வருடம் ஜூன் மாத வரை ஒத்திவைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு அரியர் தொகையும் அளிக்கப்பட மாட்டாது எனவும் டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
உயர் அதிகாரிகளுக்கு
இந்நிறுவனத்தில் அடிப்படை ஊழியர்களுக்கே 6 மாத சம்பள உயர்வு கட் செய்துள்ள நிலையில், உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது என டெக் மஹிந்திரா சில மாதங்களுக்கு முன்பு செய்தியை வெளியிட்டு இருந்தது.
இதன் மூலம் இத்துறை நிறுவனங்கள் மத்தியில் டெக் மஹிந்திரா ஒரு படி மேல் சென்றது.
2வது காலாண்டு முடிவுகள்
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் U4/P1/P2 பேண்ட் பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு 2017இன் முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் நிர்வாகக் கூட்டத்தில் சம்பள உயர்வு அளிக்கப்படுவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என டெக் மஹிந்திரா நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சகாக்கள்..
இந்திய ஐடி துறையில் காக்னிசென்ட் துவங்கி பணிநீக்கம் குறித்த அறிவிப்பு, இன்போசிஸ், விப்ரோ, டாடா டெலிசர்வீசஸ், தற்போது டெக் மஹிந்திரா வரையில் பட்டியல் நீள்கிறது.
ஆனால் இன்று காலாண்டு முடிவுகள் வெளியிட்ட எச்சிஎல் நிறுவனம் இன்னும் பணிநீக்கம் குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மொத்த இந்தியாவும் இப்படித் தான் இருக்கு..?
இத்தகைய பணிநீக்கம் ஐடி துறையில் மட்டும் தான் இருக்கிறதா என்றால் நிச்சயமில்லை.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications