உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை மானிய விலையில் அளிக்கும் திட்டமான உதான் திட்டத்தில் டிக்கெட் கட்டணம் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் எப்படி மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றதோ அதே போன்று மாறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உதான் திட்டத்தில் விமான டிக்கெட் கட்டணத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உதான் திட்டம் கீழ் விமானச் சேவை அளிக்கும் நிறுவனங்கள் 1 மணி நேர விமானப் பயணங்களுக்கு அதிகபட்ச கட்டணமாக 2500 ரூபாய் செலுத்தி பயணம் செய்யலாம்.
அதிகபட்ச கட்டணம்
மத்திய அரசு இப்போது 2,500 ரூபாய் விமானக் கட்டணமாக அறிவித்துள்ள நிலையில் இந்தக் கட்டணம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
விலை எதன் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும்
மானிய விலை விமானப் போக்குவரத்து சேவையான உதான் திட்டத்தின் கட்டணம் பணவீக்கம், ரூபாய்-டாலர் விகிதம் மற்றும் டர்பைன் எரிபொருளின் விலை போன்றவற்றைப் பொருத்து மாற்றித் தீர்மானிக்கப்படும்.
விமானக் கட்டணம் மற்றும் நிர்னைக்கப்பட்ட விலை இரண்டும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும்.
துவக்கம்
சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உதான் திட்டத்தைச் சிம்லாவில் இருந்து துவக்கி வைத்தார். முதல் கட்டமாக டெல்லி, சிம்லா, டெல்லி வழித்தடத்தில் இந்தச் சேவை துவங்கப்பட்டது.
வழித்தடங்கள்
உதான் சேவையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 5 விமான நிறுவனங்களும் 128 வழித்தடங்களில் 70 விமான நிலையங்களையும், பயன் படுத்தாமல் உள்ள 31 விமான நிலையங்களையும் பயன்படுத்த முடியும்.
கனவு
உதான் திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி ஹவாய் செறுப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பயணம் செய்வதை நான் பார்க்க வேண்டும் என்பதே தன் கனவு என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications