புல்லுக்கட்டை போல் தூக்கி எறியப்படும் ஊழியர்கள்.. இந்தியாவில் என்னதான் நடக்கிறது..?!

ஐடி, தொலைத்தொடர்பு, வங்கி, ரியல் எஸ்டேட், உணவு, ஸ்டார்டப், ஆடோமொபைல் என அனைத்துத் துறை நிறுவனங்களும் நாளுக்கு நாள் ஊழியர்களைத் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.

இந்த வேலை வாய்ப்பு இழப்பு 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மூத்த அதிகாரிகள் முதல் ப்ரெஷர்கள் வரை அனைவரும் வேலை வாய்ப்பை இழந்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

ஐடி ஊழியர்கள் வேலை வாய்ப்பு இழப்பிற்கு முக்கியக் காரணமாக ஆட்டோமேஷன், டிரம்ப்-இன் முடிவுகள் ஆகியவற்றை போன்றவை காரணம் காரணம் காட்டப்பட்டாலும், உண்மை நிலவரம் வேறாக உள்ளது.

அண்மையில் ஊழியர்களை வெளியேற்றுவதாக அறிவித்து ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்திய முன்னணி நிறுவனங்களை இங்குப் பார்ப்போம்.

காக்னிசன்ட்

காக்னிசன்ட்

ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் வேகமாக வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாகக் காக்னிசன்ட் நிறுவனம் 2.3 சதவீதம் அதாவது தங்களது நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் இருப்-து 6,000க்கும் அதிகமானோரை வேலை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

அதன் முதல் கட்டமாகக் கிட்டத்தட்ட 1000 மூத்த அதிகாரிகளை வேலையை ராஜினாமா செய்யுமாறு அறிவித்துள்ளது. இப்படி வேலையை ராஜினாமா செய்பவர்களுக்கு 9 மாதம் சம்பளம் வழங்கப்படும் என்று காக்னிசன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதே நேரம் சில ஊழியர்கள் காக்னிசன்ட் நிறுவனம் எங்களை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துவதாகவும் தொழிலாளர் உதவி ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப சேவைகள் நிறுவனமான கேப்ஜெமினி தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையில் இருந்து 5 சதவீதம் நபர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளது. அதன் பேரில் 9,000 நபர்கள் வரை நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படலாம் என்றும் 35 துணைத் தலிவர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 200 நபர்களை மும்பை கிளையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

இந்த ஊழியர்கள் நீக்கத்தை உறுதி செய்த கேப்ஜெமினி இது அவர்களது செயல்திறன் குறைவாக உள்ளது என்பதே காரணம் என்றும் அவர்களுக்குப் பதிலாக 2017-ம் ஆண்டுக் கூடுதலாக 20,000 நபர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாகவும் கேப்ஜெமினி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் 2,000 நபர்கள் ஏற்கனவே பணிக்கு எடுக்கப்பட்டுப் பயிற்சி அளித்து வருவதாகவும் கேப்ஜெமினி நிர்வாகம் தெரிவித்தது.

 

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் அன்மையில் திட்ட மேலாளர்கள், திட்ட மேலாளர்கள் உள்ளிட்ட 1,000 நபர்களை வெளியேற்ற இருப்பதாகவும், அவர்களை வெளியேற்றுவதற்குச் சரியான செயல் திறன் அவர்களிடம் இல்லை என்று கூறியுள்ளது.

தொடர்ந்து செயல்திறன் குறைந்து வருவதாகக் குறிப்பிடப்பட்ட கடைசி 10 சதவீதம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

 

விப்ரோ

விப்ரோ

ஏப்ரல் 25ஆம் தேதி காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள விப்ரோ, அறிவிப்பிற்கு முன்னதாகவே 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

2016-17ஆம் நிதியாண்டுக்கான ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் விப்ரோ நிறுவனம் Non-Performers என்று கூறப்படும் குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களைச் சுமார் 600 பேரை உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது.

 

டாடா டெலி சர்வீசஸ்

டாடா டெலி சர்வீசஸ்

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் அன்மையில் தனது விற்பனை மற்றும் பிற முக்கியப் பிரிவுகளில் இருந்து 500 முதல் 600 ஊழியர்கள் வரை வெளியேற்றியது. இந்த ஊழியர்கள் வெளியேற்றம் நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும் இருந்தும் செய்யப்பட்டுள்ளது.

டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் இந்தியாவின் 19 தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களில் ஒரு நிறுவனமாகும்.

 

ஏர்செல்

ஏர்செல்

இந்திய டெலிகாம் துறையில் நிறுவனங்கள் இணைப்பின் காரணமான ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும், இதனால் இந்தியாவில் மட்டும் 25,000 ஊழியர்களுக்குப் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பிப்ரவரி மாதம் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல், ஆனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் இணைவதற்கான பணிகளைச் செய்து வந்த நிலையில், இணைப்பிற்கு முன்னரே சுமார் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்தது.

ஏர்செல்

ஏர்செல்

ஏர்செல் நிறுவனத்தில் மொத்தம் 8,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். 700 பேர் வெளியேற்றத்தின் மூலம் 10 சதவீத ஊழியர்களை ஏர்செல் நிறுவனம் இழந்துள்ளது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல் நிறுவனம் இ-காமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பணம் செயற்பாடுகள் பிரிவுகளில் இருந்து 600 ஊழியர்களைப் பணியை விட்டு பிப்ரவரி மாதம் நீக்கியது.

ஆனால் பின்னர்த் தனது நிறுவனத்தின் 30 சதவீதம் ஊழியர்கள் அதாவது 1,000 ஊழியர்களைப் பணியை விட்டு நீக்கியது ஸ்னாப்டீல்.

 

லீகோ

லீகோ

கிராப்ட்ஸ்வில்லா

கிராப்ட்ஸ்வில்லா

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் முன்னணி பிராம்பரிய விற்பனையாளரான கிராப்ட்ஸ்வில்லா நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறுகையில், நிறுவனத்தில் பிராடெக்ட் மற்றும் டெக்னாலஜி அணிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதேபோல் ஆப்ரேஷன்ஸ் மற்றும் மார்கெட்டிங் அணிகளில் பெரும்பாலான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். என்று தெரிவித்தார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏர்செல், எம்டிஎஸ் நிறுவனங்களை முழுமையாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கு முன்பு ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியிட்டது.

 

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

இதுகுறித்து ஆக்சிஸ் வங்கி உயர் அதிகாரியான ராஜிவ் அனந்த கூறுகையில், தற்போது வங்கிகள் வாரியாக அல்லாமல் வங்கி கிளைகள் வாரியாக ஆட்டோமேஷன் பணிகள் அதிகரித்துள்ளது. தற்போது ஆக்சிஸ் வங்கி கிளைகளில் சுமார் 1500 பண வைப்பு செய்யும் இயந்திரம் உள்ள நிலையில் இங்கு டெல்லர் பணியிடம் தேவையற்ற ஒன்றாக உள்ளது என்றார்.

எச்டிஎப்சி

எச்டிஎப்சி

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி 2016ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 4,500 ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது.

இக்காலாண்டில் எச்டிஎப்சி வங்கியின் வருமானத்தின் அளவு 18 வருடச் சரிவை எட்டியுள்ள நிலையில், செலவுகளை அதிகளவில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இவ்வங்கியில் பல மாற்றங்களைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

ஊழியர்களுக்கு ஆபத்துக் காத்துக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் நாட்டின் முக்கிய வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி ஆட்டோமேஷனை அதிகளவில் கையில் எடுத்தக் காரணமாகச் சுமார் சதவீத வங்கி ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதேபணியை ஐசிஐசிஐ வங்கி 1 வருடத்திற்கு முன்பாகவே படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து.

 

இந்துஸ்தான் யூனிலீவர்

இந்துஸ்தான் யூனிலீவர்

நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனது தாய் நிறுவனமான யூனிலீவர், இக்குழுமம் வர்த்தகம் செய்யும் அனைத்துச் சந்தைகளிலும் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இதன் பெயரில் இந்தியாவில் இந்துஸ்தான் யூனிலீவர் கூட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2015-16 நிதியாண்டின் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன அறிக்கையில் படி இந்தியாவில் இருக்கும் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் சுமார் 18,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் மேனேஜர் அளவில் பணியாற்றி வருகின்றனர்.

 

பணிநீக்கம்

பணிநீக்கம்

இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் மூலம் குறைந்தபட்சம் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் அளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்படலாம் எனத் தெரிவித்தார்.

ரியல்எஸ்டேட்

ரியல்எஸ்டேட்

ஆன்லைன் ரியல்எஸ்டேட் சேவை அளிக்கும் நிறுவனமான பிராப்டைகர்-ஐ ஒரு மாதத்திற்கு முன்பு இதே துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஹவுசிங்.காம் நிறுவனம் கைப்பற்றியது.

இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு இந்திய ஆன்லைன் ரியல்எஸ்டேட் சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் எனச் சந்தையில் கருத்து நிலவி வந்த நிலையில், பிராப்டைகர் (PropTiger) நிறுவனம் சுமார் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்தது.

 

ரெனால்ட் நிஸ்ஸா

ரெனால்ட் நிஸ்ஸா

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரெனால்ட் நிஸ்ஸான் கூட்டணி நிறுவனம், சில வாரங்களுக்கு முன் தனது 3 வது ஷிப்ட் உற்பத்தி பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திய நிலையில் தற்போது நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.

இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 1,980 ஊழியர்களின் வேலைவாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 

உண்மை பின்னணி என்ன..?

உண்மை பின்னணி என்ன..?


 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+