பார்தி ஏர்டெல் சேவையை மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 ஸ்மார்ட் போன் உடன் பயன்படுத்தினால் 1 வருட 4ஜி டேட்டா மற்றும் குரல் அழைப்புகள் இலவசம் என்று ரிலையன்ஸ் ஜியோவிற்குப் போட்டியாகச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இதன் அறிவிப்பினால் ஜியோ இலவசங்களை அள்ளி வீசி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருவதைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றது.
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 போனுடன் இந்த இலவசங்களை அளிக்கின்றது.
1 வருட இலவச சலுகை
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மைக்ரோமெக்ஸ் கேன்வாஸ் 2 ஸ்மார்ட்போனை வாங்கிப் பயன்படுத்தும் போது ஒரு வருடத்திற்குத் தினமும் 1 ஜிபி இணையதளத் தரவும், ஒவ்வொரு மாதமும் பிற நெட்வொர்க்குகளுக்கு 600 நிமிடங்கள் இலவச அழைப்புகளையும் செய்து மகிழலாம்.
52 கோடி முதலீடு
புதிய சலுகை திட்டத்திற்காக 8-10 மில்லியன் டாலர் அதாவது 52 கோடிகள் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மைக்ரோமேஸ் நிறுவனம் குறைந்தபட்சம் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் கேன்வாஸ் 2 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
விலை
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 ஸ்மார்ட்போன்களின் விலையை 11,999 ரூபாய்க்கு அடுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக வியாழக்கிழமை ராகுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.
சரிந்த வியாபாரம்
மைக்ரோமேஸ் நிறுவனம் சீன நிறுவனங்களான ஓபோ, விவோ, சியோமி உள்ளிட்ட நிறுவனங்களால் 10,000 முதல் 15,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் சந்தையில் தங்களது வியாபாரத்தைப் பெரிதளவில் இழந்தது. அதனை ஈடு செய்யும் விதமாகவும் சாம்சங் J சீரிஸ், மற்றும் சீன நிறுவனங்களுக்குக் கேன்வாஸ் 2 பெறும் சவாலாக இருக்கும் என்று மைக்ரோமேக்ஸ் நம்புகின்றது.
நோக்கியா
இந்திய சந்தையில் பேர் போன மொபைல் போன் நிறுவனமான நோக்கியாவும் இதே விலையில் தான் தங்களது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாகத் தெரிகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications