சண்டே ஆனா இனி பெட்ரோல் 'லீவ்'.. மகாராஷ்டிரா பங்க் உரிமையாளர் சங்கம் முடிவு திடீர் முடிவு..!

By Krishnamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வருகிற மே 14ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மகாராஷ்டிர மாநிலத்தில் 4,500 பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பங்க்-களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், அலுவலகப் பணிகளைப் போல் காலை 9 மணி முதல் மாலை 6 வரை மட்டுமே பங்க்கள் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கோரிக்கையை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மகாராஷ்டிர மாநில பெட்ரோல் டீலர் அமைப்பு தெரிவித்துள்ளது.

முடங்கப்போகும் மும்மை

முடங்கப்போகும் மும்மை

மகாராஷ்டிர மாநில பெட்ரோல் டீலர் அமைப்பின் கீழ் இயங்கும் 4,500 பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி பங்க்-களில் 225 பங்க்கள் நாட்டின் தொழில்நகரமாகக் கருதப்படும் மும்பையில் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, காலை 9 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்கம் ஆகியவை மும்பையின் வர்த்தகச் சந்தையை முடக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்பு உருவாகும்.

ஏன் இந்த முடிவு..

ஏன் இந்த முடிவு..

பங்க் உரிமையாளர்கள் தங்களுக்கான கமிஷன் தொகை 2011ஆம் ஆண்டு முதல் மாறாமல் இருக்கிறது, இதனை உடனடியாக உயர்த்த வேண்டும், எண்ணெய் மார்கெடிங் நிறுவனத்திட சில கோரிக்கைகளும், நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருக்கும் கோரிக்கைகளுக்கு முழுமையாகத் தீர்வு காண வலியுறுத்தி மத்திய பெட்ரோல் துறை அமைச்சகத்தை அணுகியது.

ஆனால் மத்திய அரசு இதற்கு எவ்விதமான பதிலையும் அளிக்கவில்லை. இதன் எதிரொலியாகவே தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உதய் லோத்
 

உதய் லோத்

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பெட்ரோல் டீலர் அமைப்பு தலைவர் கூறுகையில், தற்போது பெட்ரோல் பங்குகள் மிகவும் குறைந்த அளவிலான லாபத்திற்கு இயங்கி வருகிறது, மேலும் ஹெய் டெக் அன்லெட்டட் பெர்ரோல் மற்றும் டீசல் விரைவாக ஆவியாகும் தன்மை கொண்ட காரணத்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது.

இதனால் பங்க் உரிமையாளக்கள் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்திக்கிறது. மேலும் பல காரணங்களை முன்னிறுத்தி இந்த முடிவை மகாராஷ்டிர மாநில பெட்ரோல் டீலர் அமைப்பு எடுத்துள்ளது.

சம்பளம்

சம்பளம்

மேலும் சில பகுதிகளில் பெட்ரோல் பங்க்-இல் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளத்தை அளிக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. தற்போது இருக்கும் கமிஷன் சதவீதத்தில் அளிக்க முடியாத ஒன்று எனவும் உதய் லோ தெரிவித்தார்.

1 லட்சம் ஊழியர்கள்

1 லட்சம் ஊழியர்கள்

காராஷ்டிர மாநில பெட்ரோல் டீலர் அமைப்பின் இந்த முடிவு பங் களில் பணியாற்றும் சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பாதிக்கும்.

பல பகுதிகளில் ஊழியர்கள் 2 அல்லது 3 ஷிப்ட்களில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 9-6 மணிவரையில் இயக்கம் ஆகியவை பெட்ரோல் பங்க் செலவினத்தை அதிகளவில் குறைக்கும் என்பது இந்த அமைப்பின் கருத்து.

மேலும் இந்த முடிவிற்கு இந்த அமைப்பில் இருக்கும் 4,500 பங்க்களில் சுமார் 80 சதவீதம் பேர் ஒத்துழைப்பை அளித்துள்ளனர்.

தொடரும்...

தொடரும்...

மேலும் இதேபோன்ற நடவடிக்கையைத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் தங்களது அறிவிப்பை ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்க உள்ளது.

55,000 பங்க்-கள்

55,000 பங்க்-கள்

இந்தியா முழுவதும் சுமார் 55,000 பெட்ரோல் பங்க்கள் இயங்கி வருகிறது. தற்போது சில பங்குகள் நாள் முழுவதும், சில காலை 6 - 10 மணி வரை இயங்கி வரும் நிலையில், இந்த வேலை நேரம் பாதியாகக் குறைந்தால் நாட்டின் மொத்த இயக்கமும் பாதிக்கும்.

20 சதவீதம் சேமிப்பு

20 சதவீதம் சேமிப்பு

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறை அளிப்பதன் மூலம் எரிபொருள் ஆவியாவதை சுமார் 20 சதவீதம் வரை தடுக்க முடியும் என்பது இவர்களின் வாதம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In Maharashtra 4,500 petrol pumps shut on Sundays, one-shift on weekdays

In Maharashtra 4,500 petrol pumps shut on Sundays, one-shift on weekdays
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X