பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் கோஏர் விமானச் சேவை நிறுவனம் 599 ரூபாய்க்கு விமான டிக்கெட்டினை அறிவித்து விமானப் பயணிகளைச் சந்தோசப்படுத்தியுள்ளது.
சலுகை காலம்
கோஏர் நிறுவனத்தின் 599 ரூபாய் சலுகை விலையில் மே 15ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்றும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
சென்ற மாதம் 20 சதவீதம் கூடுதலாகக் கோடை விமுறை காலத்தில் விமானச் சேவை அளிக்க இருப்பதாகக் கோஏர் நிறுவனம் அறிவித்தது.
கோஏர்
கோஏர் நிறுவனம் 23 வழித்தடங்களில் விமானச் சேவை அளித்து வருகின்றது. இந்தச் சலுகை விலையில் குறைவான அளவு மட்டுமே டிக்கெட்கள் கிடைக்கும் என்று, ஆனால் எத்தனை டிக்கெட்கள் கிடைக்கும் என்று கோஏர் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
வாய்தா குழுமத்தின் கோஏர் நிறுவனத்துடன் 24 ஏர்பஸ் விமானங்களும், 19 ஏ 320 மற்றும் 5 A320Neos விமானங்களும் உள்ளன.
வழித்தடங்கள்
கோஏர் நிறுவனம் என்ன தான் 599 ரூபாய் சலுகை விலையில் டிக்கெட்களை அறிவித்து இருந்தாலும் எந்தெந்த வழித்தடங்களின் இந்தச் சலுகைகள் என்று தெரிவிக்கவில்லை.
பிற நிறுவனங்களின் ஆஃபர்
போட்டி விமானச் சேவை நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் 849 மற்றும் 899 ரூபாய்க்குக் கோடைக்காலச் சலுகைகளை அறிவித்துள்ளன.
உதான் திட்டம்
பிரதமர் மோடி அவர்கள் சென்ற மாதம் சிம்லாவில் அறிமுகம் செய்த உதான் திட்டத்தின் மூலமாக 1 மணி நேரம் அல்லது 500 கிமி தொலைவிலான விமானப் பயணங்களுக்கு அதிகபட்ச கட்டணமாக 2,500 ரூபாய் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த உதான் திட்டத்தில் டிக்கெட் விலை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும்.


Click it and Unblock the Notifications