ஐடியா செல்லுலார் நிறுவனம் சனிக்கிழமை தனது 4 வது காலாண்டு அறிக்கையை வெளியிட்டது. 2015-2016 நிதி ஆண்டின் மார்ச் காலாண்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 719.5 கோடி ரூபாய் பெற்ற ஐடியா நிறுவனத்தின் வருமான 327.70 கோடி சரிந்துள்ளது.
ஐடியா நிறுவனம் 2016-2017 நிதி ஆண்டுக் காலாண்டின் மூன்றாவது காலாண்டு அறிக்கை வெளியிட்ட போது 384 கோடி ரூபாய் நட்டம் என்று தெரிவித்தது. அதே நேரம் 451.70 கோடி ரூபாய் டிசம்பர் மாத காலாண்டில் லாபம் பெற்று இருந்தது ஐடியா.
விற்பனை
காலாண்டின் மொத்த விற்பனை அளவு 8,109.10 கோடியாக அதாவது 9,458 கோடியாக இருந்த விற்பனை வருவாய் 14.5 சதவீதம் சரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஜியோவால் வந்த நிலை
புதிய நிறுவனம் போட்டியாக வந்து வணிகத்தில் பெறும் பாதிப்பு ஏற்படுத்தினாலும் சென்ற ஒரு காலாண்டில் மட்டும் 6.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தாக்கல் செய்துள்ளது.
இணைவு
ஐடியா மற்றும் வோடாபோன் இரண்டு நிறுவனங்களும் மார்ச் 20-ம் தேதி முதல் இணைந்து சேவையை அளித்து வருகின்றன. இதற்கான அனுமதியை ஐடியா நிறுவனம் பங்கு சந்தை எக்ஸ்சேஞ், செபி மற்றும் சிஐஐ உடன் பெற்றுள்ளது.
டாப் 5 தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள டாப் 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஐடியா நிறுவனத்திற்குச் சிறந்த இடம் உள்ளது என்றும் மொபைல், குரல், டிஜிட்டல் உள்ளடக்கம், மொபைல் வங்கி மற்றும் வயர்லெஸ் தரவு வணிகத்தில் முதல் இடத்தைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
கடன்
மேலும் ஐடியா நிறுவனத்திற்கு 2017 மார்ச் 31-ம் தேதி வரை 50,070 கோடி ரூபாய் வரை கடன் இருக்கின்றது.
பங்குச் சந்தை
சனிக்கிழமை நான்காவது காலாண்டு அறிக்கை வெளியிட்டதை அடுத்துத் திங்கட்கிழமை தான் ஐடியா நிறுவனத்தின் பங்குகளின் நிலை தெரிய வரும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications