ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி 2016 ம் ஆண்டு SBI NO Queue App என்ற புதிய செயலி ஒன்றைக் களமிறக்கியது. இந்தச் செயலியைப் பற்றி நம்மில் பலருக்கு எவ்வித தகவலும் தெரியாது. இந்தச் செயலி, அதன் செயல்பாடுகள், அதைச் செயல்படுத்த என்னென்ன தேவை என்ற விவரங்கள் உங்களுக்காகக் கீழே தரப்பட்டுள்ளன.
வங்கிகளில் கால் கடுக்க வரிசையில் நின்று சிரமப்படுபவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தரக்கூடிய செய்திதான் இந்தச் செயலியின் அறிமுகம். இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை. வரிசையில் முன்னால் குறுக்கே நுழைபவர்களுடன் சண்டை போட வேண்டிய அவசியமும் இல்லை.
நேரத்தை மிச்சப்படுத்தும்
வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்தச் செயலியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது பிற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்குச் செல்லும்போது வரிசையில் நிற்பதைத் தவிர்க்க மிகுந்த உதவியாக இருக்கும்.
வரிசையில் நிற்பதற்குரிய டோக்கன்
இந்தச் செயலியை உங்கள் மொபைல் ஆண்டிராய்ட் போனில் தரவிறக்கம் செய்து கொண்டால் வரிசையில் நிற்பதற்குரிய டோக்கன் அதன் வாயிலாகவே நீங்கள் புக் செய்யலாம். அந்த வரிசையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இந்தச் செயலியின் பயன்கள் என்னென்ன?
இந்தச் செயலியின் மூலம் உங்கள் அருகிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் வரிசையில் நிற்பதற்குரிய டோக்கன் பெற்றுக்கொண்டு, அந்த வரிசையில் உங்கள் இடம் குறித்த அறிவிப்பையும் பெற்றுக்கொள்ளலாம். நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் இந்தச் செயலியில்
1. குறிப்பிட்ட ஸ்டேட் பாங்க் வங்கி கிளையில் நீங்கள் உத்தேசமாக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்?
2. அந்த நிமிடம் வரை காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை,
3. உங்கள் இடத்திலிருந்து அந்த வங்கி கிளை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்ற விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
யார் யார் இதனைப் பயன்படுத்தலாம்?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ஏதாவதொரு வேலையாகச் செல்ல உள்ள பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் உபயோகமானது இந்தச் செயலி.
இந்தச் செயலியை எவ்வாறு பெறுவது?
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள், ஆண்டிராய்ட் ஆபரடிங் சிஸ்டம் 4.1 பதிப்பு, இணையதளத் தொடர்பு வசதி, உங்கள் இருப்பிடம் அறிய உதவும் ஜி பி எஸ் வசதி உள்ளவர்கள் இந்தச் செயலியை கூகிள் ப்ளே ஸ்டோர் ல் சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ஐ போன் வைத்திருப்பவர்கள் ஐ ட்யூன்ஸ் ஆப் ஸ்டோர் ல் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செயலியில் உள் நுழைவது எப்படி?
வாடிக்கையாளர் இந்தச் செயலியில் கேட்கப்படும் அடிப்படைத் தகவல்களான பெயர் மற்றும் மொபைல் எண்ணை கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். ‘சைன் அப்' தேர்ந்தெடுத்து போன் நிறுவனங்களில் உங்கள் சேவை நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள வங்கி கிளையைத் தேர்ந்தெடுக்கவும். தொடரும் திரையில் அந்த வங்கி கிளையில் நீங்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்? மற்றும் எத்தனை பேர் உங்களுக்கு முன்னாள் உள்ளனர் என்ற முழு விவரங்களும் தோன்றும். இப்போது நீங்கள் உங்கள் டோக்கனை புக் செய்து கொள்ளலாம்.
இதற்கான செலவு
இந்தச் செயலி முற்றிலும் இலவசமானதுதான். உங்கள் மொபைல் சேவை நிறுவனத்தின் இணையதளத் தொடர்பிற்கான சேவைக் கட்டணமே இதற்காகும் செலவாகும்.
இனி வரிசை இல்லை
வங்கியில் காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. உங்கள் முறை வரும் நேரத்தில் வங்கியில் நுழைந்து வங்கியின் சேவையைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்து விடலாம். ஜமாய்ங்க.....
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications