ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வருவாய் அளிக்கும் அட்சய பாத்திரமாக விளங்கிய ஹைதராபாத், தெலுங்கானா-ஆந்திர பிரிவினைக்குப் பின் ஹைதராபாத் தெலுங்கானாவிற்குச் சென்றதால் தொழில்நுட்ப சந்தையை வளர்க்க புதிய திட்டங்களும் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கத் துவங்கியுள்ளது ஆந்திர பிரதேச மாநிலம்.
இத்திட்டத்தின் மிகமுக்கியமாக அந்திர பிரதேசத்தின் தலைநகரமான அமராவதியில் சிங்கப்பூர் கூட்டமைப்புடன் இணைந்து 600 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் வளாகத்தை அமைக்க உள்ளது.
ஆந்திர பிரதேசம்
சிங்கப்பூர் கூட்டமைப்பு நிறுவனத்திற்கு (Asecndas-Singbridge) ஆந்திராவில் சுமார் 1,691 ஏக்கர் வளர்ச்சி திட்டத்திற்கான உரிமையாளராக அந்திர மாநிலம் நியமித்துள்ளது.
ஒப்பந்தம்
இத்திட்டத்தின் முதல் கட்டமாக 600 ஏக்கர் அளவில் முதல் வளர்ச்சி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இப்பகுதியில் பெரிய நிதியியல் கோபுரம் மற்றும் ஸ்டார்ட் அப் ஏரியாவை அமைப்பதற்காக இந்தச் சிங்கப்பூர் கூட்டமைப்பு மற்றும் அந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
5 வருடம்
மேலும் இந்த முதற்கட்ட திட்டம் அடுத்த 5 வருடத்திற்கும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் பெங்களுரில் இருக்கும் ITPL போன்றே இருக்கும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
பெங்களுரில் இருக்கும் International Technology Park Limited (ITPL) பகுதியை உருவாக்கியும் இந்தச் சிங்கப்பூர் கூட்டமைப்பு தான்.
பைனான்சியல் டவர்
முதற்கட்டமான 600 ஏக்கர் திட்டத்தில் இதே பகுதியில் பைனான்சியல் டவர் அமைக்கும் பணியை Asecndas-Singbridge கூட்டணி துவங்க உள்ளதாக அந்திர பிரதேசம் கேபிடல் ரீஜியன் டெவலப்மென்ட் அத்தாரி தலைவர் கூறினார்.
முதலீடும் வேலைவாய்ப்பும்
இத்திட்டத்தில் மூலமாக இப்பகுதியில் சுமார் 1,25,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல் 1,25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications