ஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தால் எப்படி ஒட்டுமொத்த டெலிகாம் துறையே களங்கிப்போனதோ, அதேபோல் அமேசான் நிறுவனத்தின் மூலம் ஈகாமர்ஸ் துறையும் ஆடிப்போனது.
உலகளவில் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் கொடிகட்டி பறங்கும் அமேசான், இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று, இந்திய இந்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட்-க்குக் கடுமையான போட்டியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது இரு நிறுவனங்களும் தள்ளுபடி விற்றபனை அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்நிறுவனம் மே 14 முதல் 18 வரையில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்கள்
பிளிப்கார்ட் நிறுவனம் துவக்கத்தில் புத்தகங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யத் துவங்கினாலும் பின்னாட்களில் அதனைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த 6 வருடங்களாக இந்நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை முக்கிய வர்த்தகப் பிரிவாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தச் சிறப்பு விற்பனையிலும் எலக்ட்ரானிக் பொருட்களை மையமாக வைத்து தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
அமேசான்
பிளிப்கார்ட் நிறுவனத்திற்குப் போட்டியாக அமேசான் நிறுவனமும் 4 நாள் தள்ளுபடி விற்பனையை அறிவித்திருந்தது. இந்த விற்பனை முடிந்த நிலையில் தற்போது பிள்பிகார்ட் நிறுவனத்தின் விற்பனை துவங்கியுள்ளது.
90 சதவீதம் வரை தள்ளுபடி
பிளிப்கார்ட் நிறுவனம் நடத்தும் 'பிக் 10 சேல்' விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் பொருட்களுக்குச் சுமார் 90 சதவீதம் வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஸ்னாப்டீல்
இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தைக் குறைக்கப் பிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் பெரிய அளவிலான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
பிளிப்கார்ட் ஏற்கனவே ஈபே இந்தியா-வை கைப்பற்றிய நிலையில், தற்போது இத்துறையில் கொடிக்கட்டி பிறந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தைக் கைப்பற்ற 1 பில்லியன் டாலர் வரையிலான தொகையை அறிவித்துள்ளது.
பேடிஎம் தனது ஆஸ்தான முதலீட்டாளரான அலிபாபா-வுடன் சேர்ந்து யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு முதலீடும் விரிவாக்கமும் செய்ய முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications