வருமான வரித் துறை விரைவாகப் பான் கார்டுடன் இணைப்பைச் செய்ய வேண்டும் என்று வழியுறுத்தி வருகின்றது. இதனைச் செய்தால் எளிதாக மின்னணு சரிபார்ப்பு மூலமாக வருமான வரி தாக்கல் செய்துவிடலாம் என்று கூறப்படுகின்றது.
இதற்காக வருமான வரித்துறை புதிதாக இரண்டு இணைப்பை அறிமுகம் செய்துள்ளது. அந்த இரண்டு இணைப்புகளின் மூலமாகப் பான் கார்டுடன் எளிதாக ஆதார் கார்டினை இணைத்து விடலாம். மற்றொரு இணைப்பின் மூலமாகப் பெயரில் உள்ள சிறிய திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
எனவே இங்கு நாம் வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ள புதிய இணைப்பைப் பயன்படுத்தி எப்படி ஆதார், பான் கார்டுகளை இணைப்பது, பெயரில் திருத்தம் செய்வது என்று இங்குப் பார்ப்போம்.
முதல் இணைப்பு
'Link Aadhaar' எனப்படும் முதல் இணைப்பை கிளிக் செய்வதன் மூலமாக ஆதார் எண் மற்றும் பான் எண்ணை எளிதாக இணைக்கலாம். இப்படிச் செய்யும் போது இரண்டு கார்டுகளிளும் பெயர் சரியாகப் பொருந்த வேண்டும்.
இணைக்கும் முறை
ஆதார் விவரங்கள் திருத்தம் செய்யும் இணைப்பை நீங்கள் தேர்வு செய்யும் போது முதலில் உங்கள் பான் குறியீடு, ஆதார் எண், பெயர் போன்றவற்றை உள்ளிட்ட பிறகு 'Link Aadhaar' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ஆதார் கார்டில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்குக் கடவுச் சொல் அனுப்பப்படும். அந்தக் கடவுச் சொல்லை உள்ளிட்டு எளிதாக இணைத்துக்கொள்ளலாம்.
ஒரு வேலை மொபைல் எண் தவறாகவோ அல்லது ஏற்றப்படாமலோ இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆதார் மின்னணு மையத்தைத் தொடர்பு கொண்டு மொபைல் எண்ணைத் திருத்திக்கொள்வது நல்லது.
பழைய முறை
வருமான வரித்துறையில் பழைய முறையின் படி ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்க வருமான வரித்துறை இணையதளத்தில் கணக்கை உருவாக்கி அதில் உள்நுழைந்த பிறகே இணைக்க முடியும். ஆனால் புதிய முறையின் படி வருமான வரித் துறையின் இணையதளத்தில் உள்நுழையத் தேவையில்லை.
இரண்டாம் இணைப்பு
'Links to correct Name' என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண் விவரங்களைத் திருத்தம் செய்வதற்கான இணைப்புகள் கிடைக்கும்.
ஆதார் விவரங்கள் திருத்தம் செய்யும் முறை
ஆதார் விவரங்கள் திருத்தம் செய்யவும் மேலே கூறியது போன்று மொபைல் எண் கண்டிப்பாகத் தேவை. இல்லை என்றால் அருகில் உள்ள ஆதார் மின்னணு மையத்தைத் தொடர்பு கொண்டு மொபைல் எண்ணைத் திருத்திக்கொள்வது நல்லது. அப்படியும் இல்லை என்றால் ஆதார் இணையதளத்தில் திருத்தம் செய்வதற்காக உள்ள படிவதை பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்திச் செய்து கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாக விவரங்களைத் திருத்தம் செய்துகொள்ளலாம், மொபைல் எண்ணைப் பதிவு செய்துகொள்ளலாம்.
பான் கார்டு விவரங்கள் திருத்தும் முறை
பான் கார்டு விவரங்களைத் திருத்தம் செய்ய வேண்டும் என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலமாக உங்களுக்குக் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து முடிப்பதன் மூலமாகத் திருத்தம் செய்துகொள்ளலாம். மேலும் இந்த இணைப்பின் மூலமாகப் புதிய பான் கார்டிற்கும் விண்ணப்பிக்க முடியும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications