ஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. 1,031 ரூபாயில் விமான பயணம்..!

ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் தொடர்ந்து விமான கட்டணத்தில் பல சலுகைகளை அளித்து வருகின்றது. கோடைக்கால விற்பனை சலுகைகளை அடுத்து இப்போது ஏர்ஏசியா நிறுவனம் 1,031 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை 'பை நவ். ஃபலை நவ்' எனற பெயரில் அறிவித்துள்ளது.

ஏர்ஏசியாவின் இந்த சலுகை விலையில் மே 21-ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்றும் 2017 செப்டம்பர் 4-ம் தேதி வரை பயணம் செய்யலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏர் ஏசியாவின் இந்த சலுகை திட்டத்தின் கீழ் முன்கூட்டியே புக் செய்ய வேண்டும் என்றும் தடைக் காலங்களில் எல்லாம் இந்த ஆஃபர் கிடைக்காது என்றும் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக சலுகை விலை கட்டணத்தை அறிவித்துள்ளது.

சலுகை உள்ள வழித்தடங்கள்

சலுகை உள்ள வழித்தடங்கள்

ஏர் ஏசியாவின் இந்த சலுகை 1,031 ரூபாய் விலை கட்டணத்தில் இம்பாலில் இருந்து கவுஹாத்தி வரை பயணம் செய்யலாம். ராஞ்சியில் இருந்து கொல்கத்தா செல்ல 1,220 ரூபாயும், கோவாவில் இருந்து ஹைதராபாத் செல்ல 1,237 ரூபாயும் விமான கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற வழித்தடங்களில் உள்ள சலுகைகள்

பிற வழித்தடங்களில் உள்ள சலுகைகள்

கோவாவில் இருந்து ஹைதராபாத் செல்ல 1,237 ரூபாயும், கோவாவில் இருந்து பெங்களூரு செல்ல 1,428 ரூபாயும், ஜெய்ப்பூரில் இருந்து பூனே செல்ல 2,908 ரூபாயும், டெல்லியில் இருந்து பெங்களூரு செல்ல 1,927 ரூபாயும், பூனேவில் இருந்து பெங்களூரு செல்ல 1,758 ரூபாயும், விஷாகபட்டினத்தில் இருந்து பெங்களூரு செல்ல 1,640 ரூபாயும், பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் செல்ல 1,565 ரூபாய் எனவும் விமான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுளது.

விமான போக்குவரத்து வளர்ச்சி

விமான போக்குவரத்து வளர்ச்சி

சென்ற சில மாதங்களாக இந்திய விமான போக்குவரத்து துறை இரண்டு அடுக்கு இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. விமான நிறுவனங்களுக்கு இடையில் உள்ள போட்டியில் பயணைகளுக்கு குறைந்த விலையில் பல சலுகைகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.

விமான டிராப்பிக்

விமான டிராப்பிக்

உள்நாட்டு விமான டிராப்பிக் 14.91 சதவீதம் மார்ச் மாதம் உயர்ந்துள்ளதாக சென்ற வாரம் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 18.59 சதவீதம் உள்நாட்டு விமான டிராபிக் உயர்ந்துள்ளதாக பொது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பிற நிறுவனங்களின் ஆஃபர்கள்

பிற நிறுவனங்களின் ஆஃபர்கள்

கோஏர், இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் விமான பயண கட்டணங்களில் பல சலுகைகளை அளித்து வருகின்றன.

இந்தியாவில் முதலீடு செய்யும் விமான போக்குவரத்து ஜாம்பாவன்கள்

இந்தியாவில் முதலீடு செய்யும் விமான போக்குவரத்து ஜாம்பாவன்கள்

விரைவில் இந்தியாவில் தங்களது முதலீடுகளை அதிகரிக்க ஜேர்மெனியின் லுஃப்தான்சா மற்றும் துபாயின் அரப் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்திய விமான போக்குவரத்து சந்தை வேகமாக வளர்ந்து வருவதை அடுத்து மேலும் பல விமான நிறுவனங்கள் இந்திய விமான சேவை அதிகரித்து அளிக்க முன்வந்துள்ளனர்.

 

உதான் திட்டம்

உதான் திட்டம்

சென்ற மாதம் இந்திய பிரமர் மோடி அவர்கள் ஹவாய் செறுப்பு அனிந்தவர்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று உதான் என்ற ஒரு மணி நேரம் பயணங்களுக்கு அதிகபட்சம் 2500 ரூபாய் அளவிளான விமான கட்டணம் முறையை அறிமுகம் செய்யும் போது கூறினார்.

உதான் திட்டத்தில் விமான கட்டணங்கள் சிறு சேமிப்பு திட்டங்கள் போன்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+