ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து வெளியேற்றி வரும் நிலையில் நாஸ்காம் அடுத்த ஐந்து வருடத்திற்க்கு எந்த நிறுவனமும் ஊழியர்களளை பணியில் இருந்து நீக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றது.
ஆனால் ஐடி நிறுவனங்கள் அறிவிப்பை பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக ஊழியர்களை வெளியேற்றுவதாக அறிவித்துக்கொண்டு தான் இருக்கின்றன.
வெளியேற்றப்படும் ஊழியர்கள்
வருகின்ற காலாண்டுகளில் ஐபிஎம் நிறுவனம் 5,000 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர் அறிவிப்பு
ஐபிஎம் நிறுவனத்தின் இந்த ஊழியர்கள் வெளியேற்ற முடிவு இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்கள் வெளியேற்றத்தை அறிவித்த சில நாட்களில் வெளிவந்துள்ளது ஊழியர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பம்
ஊழியர்களை வெளியேற்றுவதன் முதல் கட்டமாக மேலாளர்களிடம் குறைவான செயல் திறன் உள்ள ஊழியர்களின் பட்டியலை தயார் செய்யுமாறு நிர்வாகம் கூறியுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் அறிக்கை
ஐபிஎம் நிறுவனம் இது குறித்து உறுதிப்பட எந்தத் தகலையும் தெரிவிக்கவில்லை, ஆனால் மின்னஞ்சல் அறிக்கையில் ஊழியர்களின் திறன் மேம்படுத்துதல் போன்ற பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும், கிளவுட் தொழில்நுட்பம் போன்ற சேவையை வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறுகின்றது.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஐபிஎம் நிறுவனத்திற்கு இந்திய பிரிவில் இருந்து தான் உலகளவில் லாபம் அதிகம் என்றும் 1,50,000 நபர்கள் இந்திய கிளைகளில் பணிப் புரிவதாகவும் கூறப்படுகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications