பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒர் 'நற்செய்தி'.. ரூ.18,000 கோடி முதலீடு செய்யும் ஈபிஎஃப்ஓ அமைப்பு.

ஏற்கனவே இந்திய பங்குச்சந்தை, அமெரிக்க அதிபரின் அதிரடி நடவடிக்கை, வலிமையான ஆசிய சந்தை, ரூபாய் மதிப்பு உயர்வு, மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களின் வாயிலாக இந்திய பங்குச்சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளதாக EPFO அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈபிஎஃப்ஓ அமைப்பு

ஈபிஎஃப்ஓ அமைப்பு

இந்திய பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்ய மத்திய அரசு ஈபிஎஃப்ஓ அமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 18,000 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்துள்ளது.

இது இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமான செய்தி.

 

ஒய்வூதியதாரர்களின் பணம்

ஒய்வூதியதாரர்களின் பணம்

இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஒய்வுபெற்ற ஊழியர்களின் ஒய்வூதிய பணம் அனைத்தும் ஈபிஎஃப்ஓ அமைப்பு கையாண்டு வருகிறது.

இந்தத் தொகையைப் பலவேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து அதிகளவிலான லாபத்தை மட்டும் அளிப்பது மட்டுமல்லாமல் இதில் கிடைக்கும் லாபத்தை ஊழியர்களின் வைப்புக்கு வட்டி அளித்து வருகிறது.

 

ஒப்புதல்

ஒப்புதல்

இதுநாள் வரை அரசு பத்திரங்களில் அதிகளவில் முதலீடு செய்து வந்த ஈபிஎஃப்ஓ அமைப்புத் தற்போது பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் அளவீட்டை அதிகரிக்க மத்திய அரடி கோரிய நிலையில் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி 2015ஆம் ஆண்டு முதல் படிப்படியாகப் பங்குச்சந்தையில் தனது முதலீட்டை அதிகரித்து வருகிறது.

 

15 சதவீத முதலீடு

15 சதவீத முதலீடு

வருடத்திற்கு 1,20,000 கோடி பணத்தைப் பெறும் ஈபிஎஃப்ஓ அமைப்புப் பங்குச்சந்தையில் 15 சதவீத தொகையை முதலீடு செய்து வருகிறது.

இதன் படி கடந்த வருடம் எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் ஈடிஎப்-இல் செய்யப்பட்ட 15,206 கோடி ரூபாய்க்கு 13.81 சதவீத லாபம் கிடைத்தது. அதேபோல் யூடிஐ திட்ட முதலீட்டில் 9.47 சதவீதம், CPSE திட்ட முதலீட்டில் 10.18 சதவீதம் வரையிலான லாபத்தைப் பெற்றது.

 

18,000 கோடி ரூபாய்

18,000 கோடி ரூபாய்

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் 18,000 கோடி ரூபாய் வரை பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய ஈபிஎப்ஒ அமைப்பு முடிவு செய்ய உள்ளது.

எல்ஐசி

எல்ஐசி

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு நிறுவனமான எல்ஐசி இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் முக்கியமான பல நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்துள்ளது.

எல்ஐசிக்குப் பின் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்யும் பொதுத்துறை நிறுவனம் என்றால் ஈபிஎப்ஒ அமைப்பு தான்.

 

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இந்நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களை எல்ஐசி மற்றும் ஈபிஎப்ஓ அமைப்பை கவனித்து முதலீடு செய்தால் லாபம் நிச்சயம் எடுக்கலாம். ஆனால் இவ்விரு நிறுவனங்களும் நீண்ட கால முறையில் முதலீடு செய்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டாரு டட்டாட்ரேயா

பண்டாரு டட்டாட்ரேயா

மேலும் ஈபிஎப்ஓ அமைப்பின் நடப்பு நிதியாண்டின் 18,000 கோடி முதலீடு குறித்துத் தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு டட்டாட்ரேயா தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+