உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான விஸ்தரா கோடைக்காலச் சலுகையாக 999 ரூபாயில் விமான டிக்கெட் சலுகையை அறிவித்துள்ளது
விஸ்தரா நிறுவனத்தின் இந்தச் சலுகை விலையில் செவாய்க்கிழமை முதல் மே 20-ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்றும் ஜூன் 12-ம் தேதி முதல் 2018 பிப்ரவரி 20ம் தேதி வரை பயணம் செய்யலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
999 சலுகை
விஸ்தரா நிறுவனத்தின் 999 ரூபாய் சலுகை விலையில் ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரையிலும், கவுகாத்தி முதல் பாக்தோகிறா வழித்தடங்களிலும் பயணம் செய்யலாம்.
பிற வழித்தடங்கள்
டெல்லியில் இருந்து சண்டிகர் செல்ல 1,499 ரூபாயும், டெல்லியில் இருந்து லக்னோ செல்ல 1,549 ரூபாயும், டெல்லியில் இருந்து அம்ரிஸ்டர் செல்ல 1,699 ரூபாயும் விமான டிக்கெட் கட்டணங்களாக விஸ்தரா நிறுவனம் அறிவித்துள்ளது.
சீட்டுகள்
999 ரூபாயுக்கு விமான டிக்கெட் விலையை விஸ்தரா நிறுவனம் அறிவித்தபோதிலும் எத்தனை சீட்டுகள் அந்த விலையில் கிடைக்கும் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.
எக்கானமி வகுப்பு
எக்கானமி வகுப்புப் பயணத்திற்குத் தான் அந்த 999 ரூபாய் விமானக் கட்டணம் என்றும் பிரீமியம் வகுப்பில் பயணம் செய்ய வேண்டும் என்றால் 2,099 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும் என்று விஸ்தரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டணத் தொகை திரும்பப் அளிக்கப்பட மாட்டாது
சலுகை விலையில் டிக்கெட் புக் செய்யும் கட்டணம் பயணத்தை ரத்து செய்யும் போது திருப்பி அளிக்கப்படாது என்றும் விஸ்தரா நிறுவனம் கூறியுள்ளது.
பிஸ்னஸ் வகுப்பு
விஸ்தரா நிறுவன அன்மையில் பிஸ்னஸ் வகுப்புப் பயணக் கட்டணங்களை 50 சதவீதம் வரை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்களில் ஆஃபர்
விஸ்தரா நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான கோஏர் 599 ரூபாயிலும், ஸ்பைஸ்ஜெட் 849 ரூபாயிலும், இண்டிகோ நிறுவனம் 899 ரூபாயிலும், ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் 1,031 ரூபாயிலும் விமானக் கட்டணங்களை அறிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications