இந்திய வங்கிகள் தங்களது ஏடிஎம் மையங்களில் உலக நாடுகள் பயன்படுத்துவதை விடக் குறைவான வேகம் உள்ள கணினிகளைத் தான் ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அதனால் தான் இந்தியாவில் பாதிப்பில்லை என்றும் கூறப்படுகின்றது.
பாதிப்பில்லை
இந்தியாவில் முக்கியமாக எந்த வங்கிகளும் ரான்சம்வேர் தாக்குதலில் பாதிப்படையவில்லை என்றும் ஆனால் சில இடங்களில் சிக்கல் உள்ளது போன்று தெரிகின்றது என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
தென் இந்தியா
தென் இந்தியாவில் உள்ள ஒன்று அல்லது இரண்டு சிறிய வங்கிகள் பதிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும், ஆனால் சேதத்தின் அளவு பெரிதளவில் இல்லை என்றும் இதைப் பற்றி நன்கு அறிந்த வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலாவதியான இந்திய ஏடிஎம்கள்
உலகம் முழுவதும் 104 நாடுகள் பெரிதளவில் ரான்சம்வேர் தாக்குதலில் பாதிப்படைந்து இருக்கும் போது இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.
இந்திய வங்கிகள் சைபர் குற்றங்கள் குறைவாக நடப்பதற்குப் பேர் போன நிலையில் வங்கிகள் ஒழுங்குமுறை விமர்சனத்தைக் கவர்ந்துள்ளது.
காரணம்
இந்திய ஏடிஎம் மையங்கள் க்லோஸ்டு லூப் சிஸ்டம்களாக இயங்குகின்றது என்றும் பொதுவாக மெதுவாகத் தொலைவில் உள்ள கணினிகள் இயங்கும் என்றும் எனவே மால்வேர்கள், பொதுவாகச் சில மெகாபைட் அளவுகள், ரிமோட் சாதனங்களில் தங்களை நிறுவுவதற்கு நேரம் எடுக்கும் என்றும் அதனால் அவ்வளட்வு எளிதாக இந்திய ஏடிஎம்களில் ரான்சம்வேர் தாக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.
குறைவான வேகமும் ஒரு காரணம்
இந்திய ஏடிஎம் இயந்திரங்கள் பெரும்பாலானவை விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் செயல்பட்டு வருவதாகவும் அதனால் எளிதாக ஹேக் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஏடிஎம் இயந்திரங்கள் உறுவாக்குனர்களைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது ஏடிஎம் கணினிகள் மெதுவாகச் செயல்படுவதால் அவ்வளவு விரைவாகப் பாதிப்பு ஏற்படாது என்றும் ரான்சம்வேர் மால்வேர் அதிக இடம்பிடிக்கக் கூடிய இயங்குதளம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications