ஐடி நிறுவனங்களில் நடக்கும் அதிகளவிலான அளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து எவ்விதமான கருத்தையும் பதிவு செய்யாமல் இருந்த மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதில் ஊழியர்கள் பணிநீக்கம் பெரிய அளவில் இல்லை என்று, தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருக்கும் என ஐடி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக ஐடி துறை செயலாளர் அருணா சவுந்தராஜன் கூறினார்
அருணா சவுந்தராஜன்
தகவல் தொழில்நுட்ப துறையில் செயலாளரான அருணா சவுந்தராஜன் இந்திய ஐடி துறை நிறுவனங்களில் பெரிய அளவிலான பணிநீக்கம் ஏதும் இருக்காது என்றும், அதேவேளையில் இத்துறையின் வளர்ச்சி 8-9 சதவீதமாக இருக்கும் என இத்துறை நம்பிக்கை அளித்துள்ளதாக இவர் தெரிவித்தார்.
பணிநீக்கம்
மேலும் அவர் ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் செயல்திறன் ஆய்வின் முடிவுகள் மூலம் சில ஊழியர்களின் பணிக்கான ஒப்பந்தம் தொடர முடியாத நிலையில் தான் இந்திய ஐடி நிறுவனங்கள் உள்ளது. இது தான் தற்போதைய நிலை என்று அருணா கூறினார்.
பெரிய விஷயம்
ஐடி துறையில் தற்போது நடக்கும் பணிநீக்கம் பெரியதாகப் பார்க்காமல், இத்துறையில் நடக்கும் இயல்பான ஒன்று, இதுகுறித்து எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பது போல் அருணா சவுந்தராஜன் கூறியுள்ளார்.
உண்மையில் இது ஐடி நிறுவனங்களில் இயல்பான ஒன்று தான். ஒல்வொரு வருடமும் கணிசமான எண்ணிக்கையில் ஐடி நிறுவனங்கள் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது இயல்பு.
ஆனால் இந்த முறை அனைத்து முன்னணி நிறுவனங்களும் சராசரி அளவுகளை விடவும் அதிகமான எண்ணிக்கையில் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது தான் இப்போதைய பிரச்சனை.
மாற்றம்
மேலும் சர்வதேச சந்தை வர்த்தகத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது சேவை வர்த்தகத்தைப் பரிவுகளைக் கிளவுட், பிக் டேட்டா மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் வாயிலாகக் கொண்டு செல்கிறது. இதுவும் தற்போதைய நிலைக்கு முக்கியக் காரணம் என்றும் அருணா குறிப்பிட்டார்.
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு
இந்திய ஐடி துறை இந்த வருடம் 8-9 சதவீதம் வரையிலான வளர்ச்சி அடையும் என்றும், அடுத்த 2.5 வருடங்களில் புதிதாக 5 லட்சம் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் நம்பிக்கை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
7 நிறுவனங்கள்
தற்போது இந்தியாவில் சுமார் 7 நிறுவனங்கள் வெளிப்படையாகப் பணிநீக்கம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த வருடம் மட்டும் சுமார் 56,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
தற்போதைய நிலையில், விப்ரோ, இன்போசிஸ், காக்னிசென்ட், டாடா டெலிசர்விசஸ், டிஎக்ஸ்சி டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா மற்றும் கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications