இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் வேலெட் வர்த்தக நிறுவனமான பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து இறுதி ஒப்புதலை வாங்கியுள்ளது.
இதன் மூலம் அடுத்தச் சில வாரங்களில் பேமென்ட்ஸ் வங்கி சேவையில் முழுமையாகக் களமிறங்க உள்ளது பேடிஎம். இந்நிலையில் பேடிஎம் வேலெட்டில் இருக்கும் உங்கள் பணம் என்னாகும்..?
காசு.. துட்டு.. மணி.. மணி..
மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த தடை செய்த பின் இந்தியாவில் பொட்டிகடைகள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடத்திலும் பேடிஎம் சேவை பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்நிறுவன வேலெட் சேவைகளில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் தற்போது வைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் என்ன ஆகப்போகிறது.
மே 23
இந்தியாவில் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து பேடிஎம் நிறுவனம் அனைத்து விதமான உரிமத்தையும் வாங்கிவிட்டது.
இதன் மூடம் வருகிற மே 23ஆம் தேதி முதல் முழுமையான சேவையை அளிக்கத் துவங்க உள்ளது.
ரிசர்வ் வங்கி உத்தரவு..
ஏற்கனேவே பேடிஎம் வேலெட் சேவையை அளித்து வந்த நிலையில், இதனை முழுமையாகத் தனது புதிய பேமென்ட் வங்கிக்கு மாற்ற உள்ளது.
இந்தப் புதிய நிறுவனத்தின் உரிமையைப் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சீஇஓவான விஜய் சேகர் ஷர்மாவின் பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு
மேலும் தற்போது வேலெட் சேவை வாடிக்கையாளர்களின் கணக்கின் மாற்றம் குறித்து மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
பேமென்ட் வங்கிக்கு மாற்றப்படும் வேலெட்-கள் தற்போது இருக்கும் அனைத்துக் கட்டணங்கள், வரம்புகள் ஆகியவை தொடரும் எனத் தெரிகிறது.
முதல் வேலை
பேடிஎம் நிறுவனம் தனது வேலெட் வாடிக்கையாளர்கள், கணக்குகள், இருப்புகள், தகவல்கள் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பேமென்ட் வங்கி தளத்திற்கு மாற்றுவதே புதிய பேமென்ட் வங்கியின் முதல் பணி.
இதற்காக வேலெட் வாடிக்கையாளர்கள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
பேடிஎம் ஆப்
இந்நிறுவனத்தில் மே 23ஆம் தேதி முதல் வேலெட் சேவை முடங்குவதாலும், பேமென்ட் சேவைத் துவங்கும் காரணத்தாலும் பேடிஎம் ஆப் எவ்விதமான மாற்றத்தையும் செய்யப்போவதில்லை.
தற்போது நீங்கள் செய்யப்படும் பணப் பரிமாற்றத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
கெக் புக், டெபிட் கார்டு கிடைக்குமா..?
இந்தப் புதிய பேமென்ட் வங்கியில் கெக் புக், டெபிட் கார்டு கிடைக்குமா என்றால், கிடைக்கும்.
ஆனால் அதற்கு நீங்கள் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள வங்கியில் கணக்கை துவங்கினால் கெக் புக், டெபிட் கார்டு, ஆகியவற்றைப் பெறலாம், வேலெட் சேவையில் இருந்து வங்கிக்கு மாற்றப்படும் கணக்கு அனைத்தும் வெறும் கணக்காக மட்டுமே இருக்கும்.
இவர்களுக்குக் கெக் புக், டெபிட் கார்டு ஆகியவை வேண்டுமெனில் புதிய கணக்கை திறக்க வேண்டும். இதற்கான சேவையைப் பேடிஎம் அளிக்கும்.
வட்டி
இக்கணக்கில் வைப்புச் செய்யப்படும் பணத்திற்குப் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வட்டி அளிக்கும். இதுகுறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
மேலும் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி வைப்பு நிதிக்கு 7.25 சதவீதம் அளவிற்கு வட்டியை அளிக்கிறது.
என்ன வித்தியாசம்?
ஏர்டெல் அதிரடி..!
'ஏர்டெல்' பேமெண்ட்ஸ் வங்கி
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications