பதஞ்சலி சூறாவளியில் தப்பித்த ஓரே நிறுவனம் 'டாபர்'.. மோசமான நிலையில் கோல்கேட்..!

பாபா ராம்தேவ் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் படி இயங்கும் பதஞ்சலி நிறுவனம் நுகர்வோர் பொருட்கள் சந்தையில் பல பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விலை மலிவாக இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது. இந்த வளர்ச்சியால் காலங்காலமாகக் கட்டியாண்டு வந்த பன்னாட்டு நிறுவனங்களின் நிலை தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பு மற்றும் வர்த்தகப் பொருட்களான தன்ட் கான்டி டூத்பேஸ்ட்-ஆல் ஏற்பட்ட பாதிப்பை பாருங்கள்.

டூத்பேஸ்ட்

டூத்பேஸ்ட்

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ள துறைகளில் முதன்மையானவை நுகர்வோர் விற்பனை சந்தை. இதில் மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் அனைத்து முக்கியமான பொருட்களும் இதில் அடங்கும்.

அதில் டூத்பேஸ்ட் விற்பனையும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது

 

வெற்றி

வெற்றி

பதஞ்சலி தன்ட் கான்டி டூத்பேஸ்ட் அறிமுகத்திற்குப் பின் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூத்பேஸ்ட் பிராண்ட் பட்டியலில் மிகப்பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சொல்லப்போனால் இதன் அறிமுகத்திற்குப் பின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் விற்பனை குறைந்த நிலையில், ஒரே ஒரு நிறுவனம் மட்டும் சரிவில் இருந்து தப்பி விற்பனையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

டாபர்

டாபர்

2017ஆம் நிதியாண்டில் டூத்பேஸ்ட் விற்பனை சந்தையில் கோல்கேட், க்லோஸ்-அப் ஆகிய முன்னணி பிராண்டுகளின் விற்பனை சரிந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பதஞ்சலி விளங்குகிறது.

ஆயினும் இதே காலகட்டத்தில் டாப்ர் இந்தியா நிறுவனத்தின் டாபர் ரெட் பேஸ்ட்-இன் விற்பனை அதிகரித்து எப்போதும் எட்டாத 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த உயர்விற்கு முன்னணி நிறுவனங்களின் சரிவும், தன்ட் கான்டி டூத்பேஸ்ட் போன்றே சுவை மற்றும் நற்பயன்கள் கொண்டதே இதற்குக் காரணம்.

8.5 சதவீத சந்தை

8.5 சதவீத சந்தை

தற்போதைய நிலையில் டாபர் ரெட் பேஸ்ட் இந்திய சந்தையில் மட்டும் சுமார் 8.5 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் 7.5 சதவீதம் வர்த்தகச் சந்தையைக் கொண்ட சிபாக்கா பிராண்டை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 

தன்ட் கான்டி டூத்பேஸ்ட்

தன்ட் கான்டி டூத்பேஸ்ட்

கடந்த ஒரு வருடத்தில் பதஞ்சலி-யின் தன்ட் கான்டி டூத்பேஸ்ட்-இன் விற்பனை 1.5 சதவீதம் வரை உயர்ந்து சுமார் 3 சதவீத வர்த்தகச் சந்தையைக் கைப்பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வேகமாக விற்பனையாகும் டூத்பேஸ்ட் பிராண்டுகளில் இது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ரூ.10,000 கோடி பிஸ்னஸ்

ரூ.10,000 கோடி பிஸ்னஸ்

2017ஆம் நிதியாண்டில் பதஞ்சலி சுமார் 10,000 கோடி ரூபாய் வர்த்தகத்தைச் செய்துள்ளதாகவும், இதில் 940 கோடி ரூபாய் தன்ட் கான்டி டூத்பேஸ்ட் கிடைத்துள்ளது.

கோல்கேட்

கோல்கேட்

தன்ட் கான்டி டூத்பேஸ்ட் அறிமுகத்திற்குப் பின் இந்திய சந்தையில் கோல்கேட் நிறுவனத்தின் சந்தை பங்கீடு சுமார் 55.5 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.

ஆச்சர்யா பாலகிருஷ்னா

ஆச்சர்யா பாலகிருஷ்னா

மலையாளி

மலையாளி

 

 

கத்தி விஜய்

கத்தி விஜய்

 

 

சபாஷ் சரியான போட்டி

சபாஷ் சரியான போட்டி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+