மும்பை: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் குளோபல் கேம் சேஞ்சர் இரண்டாவது வருடாந்திர பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 25 துணிச்சலான வணிகத் தலைவர்கள் தொழிற்துறைகளை மாற்றி உலகெங்கிலும் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார்கள்.
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்தப் பட்டியலில் இந்தியர்களில் இவரைத் தவிர வேறு ஒருவர் பெயர் கூட இடம்பிடிக்கவில்லை.
உங்களால் நம்ப முடியுமா?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு இப்போது வயது 60, இவரது நிறுவனம் பங்குச் சந்தையில் அனைவராலும் விரும்பப் படும் டாடா நிறுவனத்தின் டிசிஸ் பங்குகளைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 5 மாதத்தில் மட்டும் 7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
காரணம்
அம்பானியின் சொத்து மதிப்பு இந்த அளவு உயர்ந்து இருப்பதற்கு முக்கியக் காரணமாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் 2016-2017 நிதி ஆண்டு இறுதியில் 10.9 கொடி சந்ததாரர்களை ஜியோ நிறுவனம் பெற்றது ஆகும்.
உயர்வு
டிசம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இருந்ததை விட 2017 மார்ச் 17ம் தேதி 7.10 பில்லியன் டாலர் உயர்ந்து 29.9 பில்லியன் டாலராக உள்ளது என ப்ளூம்பெர்க் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
கேம் சேஞ்சர்
அம்பானி தனது புதிய உத்தியால் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்பது மாற்றோர் சிறப்பு.


Click it and Unblock the Notifications