அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அன்மையில் ஆசியா பெசிபிக் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1,400 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாகக் கூறியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் இந்தியாவில் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அதிகப் பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 சதவீத ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
ஃபோர்டு நிறுவனம் அன்மையில் வெளியிட்ட அறிக்கையில் தங்களது நிறுவனத்தில் இருந்து ஊதியம் மற்றும் இதர செலவுகளைக் குறைக்கும் விதமாக 10 சதவீத ஊழியர்களை அமெரிக்கா மற்றும் ஆசிய பெசிபிக் நாடுகளில் இருந்து விருப்ப ஓய்வூடன் பெறும் தொகையை அளித்து வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் வரை காலக்கெடு
ஃபோர்டு நிறுவனத்தின் அறிக்கையின் படி 1,400 ஊழியர்கள் செப்டம்பர் இறுதிக்குள் வெளியேற்றப்படலாம் என்று கூறுகின்றது.
ஜூன் மாதம் முதல் ஊழியர்களுக்கு அறிவிப்பு
ஜூன் மாதம் முதல் இதற்கான ஆறிவிப்பு ஊழியர்களுக்கு வரும் என்றும், இந்தியாவில் இருந்து அதிக ஊழியர்கள் வெளியேற்றபட வாய்ப்பில்லை என்றாலும் செயல்பாடுகளில் இந்தியாவிற்கு அதிகப் பாதிப்பு இருக்கும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊழியர்கள் பிரிப்பு நடக்கப்படும் இடங்கள்
வட அமெரிக்கா மற்றும் ஆசிய பெசிபிக் பகுதிகளில் தான் அதிகளவில் திறன் படைத்த ஊழியர்கள் உள்ளதாகவும் அதனால் இங்குத் தான் ஊழியகள் பிரிப்பு நடவடிக்கை எடுக்க இருக்கின்றது என்றும் ஃபோர்டு கிரெடிட், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய தரவு மற்றும் பகுப்பாய்வுகள் ஆகியவற்றின் செயல்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.
இந்திய பிரிவில் அதிக விலக்கு
இந்தியாவில் இருந்து செயல்படும் பல நடவடிக்கைகளுக்கு விலக்கு உள்ளதால் ஊழியர்கள் வெளியேற்றம் குறைவாகத் தான் இருக்கும்.
மூன்று முக்கிய முடிவுகள்
ஃபோர்டு நிறுவனத்தின் முக்கிய வியாபாரத்தில் லாபத்தை அதிகரித்து உறுதிபடுத்தும் விதமாகவும், வியாபாரம் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து தோய்வை நீக்கி ஆக்ரோஷமாக முதலீடு செய்யும் விதமாகவும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்துவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications