பெங்களூரு: பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் மூலமாகப் பல நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வந்துகொண்டு இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் தங்களது தயாரிப்பை முதலில் சென்னையில் ஆரம்பிக்க முயன்று அது தோல்வி அடைந்ததை அடுத்துப் பெங்களூரில் துவங்கப்பட்டது.
இப்போது பெங்களூரில் தயாரிக்கப்பட்ட முதல் ஐபோனை ஒரு வாரத்தில் விற்பனைக்கு வரப்போவதாக அறிவித்துள்ளது. இதில் தான் பிரச்சனை. இத்தனை நாட்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தபோது என்ன விலைக்கு மொபைல் வெற்க்கப்பட்டதேஓ அதே விலையில் தான் விற்போம் என்று ஐபோன் தரப்பு தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் கீழ் பல மானியங்களைப் பெற்று தொழிலை துவங்கிய நிறுவனம் விலையைக் குறைக்காதது பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐபோனை அசம்பளிங் செய்யும் மூன்றாவது நாடு
அப்பிள் நிறுவனம் சில ஆயிரம் போன்களை இந்தியாவில் உள்ள தங்களது ஆலையில் இருந்து அசம்பளிங் செய்துள்ளது என்றும் அந்தப் போன்கள் விரைவில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை அசம்பிளிங் செய்வதில் மூன்றாம் இடமாக இந்தியா சேர்ந்துள்ளது.
போனில் உள்ள அம்சங்கள்
ஏ9 சிப் கொண்ட 4 இன்ச் போனான ஐபோன் 6எஸ் போனில் 12 மெகாபிக்செல் கேமிரா உடன் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்தப் போன் பெங்களூரு பீனியாவில் உள்ள பிரிவில் இருந்து தயாஎ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தப் போன் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 25,000 ரூபாய் மதிப்பிற்கே விற்பனை ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வாடிக்கையாளர்கள்
துவக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சொற்பமான ஐபோன்கள் மே மாதம் இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்றும் ஐபோன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உதிரிப்பாகங்கள்
ஐபோன், ஐபாடு, ஐபேடு மற்றும் மேக் தயாரிப்புகளின் உதிரிப் பாகங்கள் 28 நாடுகளில் இருந்தும் 766 வழங்குநர்களிடம் இருந்தும் பெறப்படுகின்றது. இப்படிப் பெறப்படும் உதிரிப்பாகத்தில் 346 சீனாவில் இருந்தும், 126 ஜப்பானில் இருந்தும், 69 அமெரிக்காவில் இருந்தும் பெறப்படுகின்றது.
அசம்பளி
இந்தியாவில் தமிழகத்தில் அமைந்துள்ள ஃபெளக்ட்ரானிக்ஸ் மற்றும் சீனா, அமெரிக்கா, ஐயர்லாந்து உள்ளிட்ட இடங்களில் இருந்து அசம்பள் செய்யப்படுகின்றது.
ஆப்பிள் பெறும் மானியங்கள்
ஐபோன் தயாரிக்க ஆப்பிள் நிறுவனத்திற்குக் கர்நாடக அரசு, மின்சாரம், வரி, உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்வது உள்ளிட்டவற்றில் பல மானியங்களை அளித்துள்ளது. ஆனால் விலை மற்றும் குறைவில்லை. இதனால் லாபம் யாருக்கு..?
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications