இந்திய ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இத்துறை ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
பன்னாட்டுச் சந்தைகளுக்கு ஏற்ப மாறி வரும் இந்திய ஐடி நிறுவனங்களின் வர்த்தக முறையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்மெனில் தற்போது பணியாற்றிக்கொண்டு இருக்கும் 40 சதவீத ஊழியர்கள் Re-Skilling அதாவது புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.
ஆட்டோமேஷன்
அதேபோல் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகளவில் குறைக்கத் திட்டமிடும் ஐடி நிறுவனங்கள் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து இடத்திலும் ஆட்டோமேஷன் செய்து வருவதால், நிறுவனத்தில் தேவையற்ற ஊழியர்களை வெளியேற்றுவதில் எவ்விதமான தயக்கமும் இருக்காது எனவும் நாஸ்காம் எச்சரித்துள்ளது.
வேறு வழியில்லை..
154 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி நிறுவன சந்தையில் அதிகளவிலான பணிநீக்கம் செய்யப்படுவது குறித்துத் தினமும் அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வருகிறது. இதிலிருந்த தப்பிக்க ஊழியர்கள் அனைவரும் நிறுவனத்திற்குத் தேவையான திறனை வளர்த்துக்கொண்டால் கண்டிப்பாகப் பணிநீக்கத்தில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளலாம்.
இதுவே தற்போது ஐடி துறையின் புதிய மந்திரம் என நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
முக்கியத் தொழில்நுட்பம்
இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் ஊழியர்களை Re-Skilling செய்தாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் ஐடி ஊழியர்கள் புதிய டெக்னாலஜிகளான விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமென்டெட் ரியாலிட்டி மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆகியவற்றைக் கற்க வேண்டும் என நாஸ்காம் அமைப்பின் சேர்மேன் ராமன் ராய்த் தெரிவித்துள்ளார்.
புதிய வேலைவாய்ப்புகள்
மேலும் இந்திய ஐடி சந்தையில் ஆட்டோமேஷன், புதிய டெக்னாலஜி அறிமுகம் எனப் பல அதிரடி மாற்றங்களைச் சந்தித்தாலும் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்ந்து உருவாகி வருகிறது என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
பயப்பட வேண்டாம்..
கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருக்கும் 7 முன்னணி நிறுவனங்கள் அறிவித்துள்ள படியே 56,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், நாஸ்காம் ஐடித்துகையில் பயப்படும் படி எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் கடந்த 3 வருடத்தில் 6 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதையும் நாஸ்காம் சுட்டிக்காட்டியுள்ளது.
56,000 ஊழியர்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் இந்த வருடம் சுமார் 56,000 ஊழியர்களைத் தங்களது நிறுவனத்தில் இருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஐடி துறை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளது.
தற்போது வெளியேற்றப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் இரண்டு மடங்கும் அதிகமாகும்.
7 நிறுவனங்கள்
இந்தியாவில் இதுநாள் வரையில் பணிநீக்கம் குறித்து அறிவித்துள்ளது 7 நிறுவனம். இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், காக்னிசென்ட், டிஎக்ஸ்சி டெக்னாலஜி மற்றும் கேப்ஜெமினி ஆகியவை. இந்த நிறுவங்களில் தற்போது 12.4 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், 2017ஆண்டி சுமார் 4.5 சதவீத ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
காக்னிசன்ட்
காக்னிசன்ட் நிறுவனம் 2.3 சதவீதம் அதாவது தங்களது நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையில் இருப்-து 6,000க்கும் அதிகமானோரை வேலை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
அதன் முதல் கட்டமாகக் கிட்டத்தட்ட 1000 மூத்த அதிகாரிகளை வேலையை ராஜினாமா செய்யுமாறு அறிவித்துள்ளது. இப்படி வேலையை ராஜினாமா செய்பவர்களுக்கு 9 மாதம் சம்பளம் வழங்கப்படும் என்று காக்னிசன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கேப்ஜெமினி
கேப்ஜெமினி தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையில் இருந்து 5 சதவீதம் நபர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளது. அதன் பேரில் 9,000 நபர்கள் வரை நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படலாம் என்றும் 35 துணைத் தலைவர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 200 நபர்களை மும்பை கிளையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்போசிஸ் அன்மையில் திட்ட மேலாளர்கள், திட்ட மேலாளர்கள் உள்ளிட்ட 1,000 நபர்களை வெளியேற்ற இருப்பதாகவும், அவர்களை வெளியேற்றுவதற்குச் சரியான செயல் திறன் அவர்களிடம் இல்லை என்று கூறியுள்ளது.
விப்ரோ
ஏப்ரல் 25ஆம் தேதி காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள விப்ரோ, அறிவிப்பிற்கு முன்னதாகவே 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
டிஎக்ஸ்சி டெக்னாலஜி
இந்நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் இந்தியாவில் இருக்கும் தனது 50 அலுவலகங்களை 26ஆக அதாவது 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தனது 1,70,000 ஊழியர்கள் எண்ணிக்கையில் 10,000 பேரை இந்த வருடம் வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
ஒரு அட்டகாசமான ஐடியா..!
3 பிரிவிற்கு டார்கெட்
யூனியன் அவசியம்
இவர்கள்தான்..!
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications