நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 2017ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் 2,814 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
கடந்த வருடம் இதே காலாண்டில் இவ்வங்கியின் லாபம் 1,263.81 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 2 மடங்கு அதிகரித்து அசத்தியுள்ளது.
வருமானம்
மேலும் எஸ்பிஐ வங்கியின் மொத்த வருமானத்தின் அளவும் 17.3 சதவீதம் அதிகரித்து 18,070.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 15,401.30 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வராக் கடன்
எஸ்பிஐ வங்கியின் மொத்த வராக்கடன் அளவு மார்ச் மாத்துடன் முடிவடைந்த காலாண்டில் 7.23 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மீது இவ்வங்கியின் மதிப்பு கூடியுள்ளது.
ஈவுத்தொகை
பங்குச்சந்தையில் இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி நிர்வாகம் ஒரு பங்கிற்கு 2.60 ரூபாய் அளித்துள்ளது.
வீட்டுக் கடன்
சமீபத்தில் எஸ்பிஐ வங்கி பல மாதங்களுக்குப் பின் தன்னுடைய முக்கியச் சேவையான வீட்டு கடனின் வட்டியைக் குறைந்தது. இதன் பின் ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கியும் வட்டியைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications