பேஸ்புக் நிறுவனம் புதிதாக உணவு ஆர்டர் செய்யும் சேவையை அமெரிக்காவில் உள்ள சில பயனர்களுக்கு மட்டும் செயலியின் மூலம் வழங்க இருக்கின்றது. இதற்காக உணவு வழங்கும் நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலி ஏதும் உங்களுக்குத் தேவையில்லை.
இதற்காகப் பேஸ்புக் நிறுவனம் ஹம்புர்கர் ஐகான் ஒன்றைச் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் பயனர்கள் ஆர்டர் செய்யும் உணவு டெலிவரி,காம் அல்லது ஸ்லைஸ் நிறுவனங்கள் மூலமாக டோர் டெலிவரி செய்வார்கள் என்று வெள்ளிக்கிழமை டெக் கிரன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தம்
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் உலகின் மிகவும் பிரபலமான சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் இதற்காக டெலிவரி.காம் மற்றும் ஸ்லைஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. அதற்கான பணிகள் முடிந்து சோதனை ஓட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக்
சமுக வலைத் தளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக் தளத்தில் 2 பில்லியன் வாடிக்கையாளர்கள் மாதாந்திர பயனர்களாக இந்த ஆண்டில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் உலகின் பிரபலமான வாட்ஸ் ஆப், இஸ்டாகிராம் மற்றும் மெசெஞ்சர் செயலிகளும் பேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவங்கள் ஆகும்.
புதிய சேவைகள்
பேஸ்புக் நிறுவனம் எண்ணற்ற அம்சங்களைப் புதிதாகத் தனது சேவையில் சேர்த்தன மூலமாக வானிலை, போன்ற பல நெட்வொர்கிங் சேவையை டிஸ்கவர் பீப்பல் மூலமாக வழங்குகின்றது. அது மட்டும் இல்லாமல் டிராவல் பிரிவைச் சிட்டி கைடு என்றும் அரசு சம்மந்தப்பட்ட விவரங்களை டவுன் ஹால் என்றும் வேலை வாய்ப்பு, கேம்ஸ் மற்றும் பிற சேவைகளையும் வழங்குகின்றது.
பேஸ்புக் பக்கங்கள் மூலம் உணவு ஆர்டர்கள்
உணவு டெலிவரி சேவையை டெலிவரி.காம் மற்றும் ஸ்லைஸ் நிறுவனங்களில் பேஸ்புக் பக்கங்கள் மூலமாக வழங்கப்படுவதைப் பேஸ்புக் உறுதி செய்துள்ளது.
கூகுள் ஏரோ
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications