சதாப்தி ரயிலினை விட அதிக டிக்கெட் விலை கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. ஏன்?

மும்பை: இந்தியாவின் நவினமயம் ஆக்கப்பட்ட தேஜாஸ் ரயில் சேவை மும்பையில் இருந்து கோவா பயணத்தைத் திங்கட்கிழமை துவங்கியது. விமானப் போன்று பல வசதிகளைக் கொண்ட இந்த ரயில் டிக்கெட்டின் விலை சதாப்தி ரயில் கட்டணத்தை விட அதிகமாகும்.

தேஜாஸ் ரயிலில் அப்படி என்ன தான் வசதிகள் உள்ளன, பாதுகாப்பு வசதிகள் எப்படி உள்ளது, எந்த வழித்தடத்தில் பயணிக்கின்றது, கட்டணம் எவ்வளவு என்று எல்லாம் இங்குப் பார்ப்போம்.

தேஜாஸ் ரயிலில் உள்ள வசதிகள்

தேஜாஸ் ரயிலில் உள்ள வசதிகள்

தேஜாஸ் ரயிலில் முழுமையாகப் பயண விவரங்கள், வைஃபை, சிசிடிவி, தீ மற்றும் புகை கண்டறிதல் வசதிகள், தேநீர் மற்றும் காபி வழங்கும் இயந்திரம் போன்ற எண்ணற்ற அல்ட்ரா மார்டன் வசதிகள் உள்ளன. ஞயாயிற்றுக்கிழமை தேஜாஸ் ரயிலை மும்பை சத்திரபதி சிவாஜி டர்மினஸ் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே பொது மேலாளர் தேஜாஸ் ஒரு தரையில் பயணிக்கும் விமானம் என்று கூறினார்.

வேகம்

வேகம்

இந்தியாவின் முதல் பிரீமியம் ரயிலான தேஜாஸ் ஒரு மணி நேரத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

காபுர்தாலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை இந்தப் பெட்டிகள் ஆட்டோமேட்டிக் டோர் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய புறநகர் அல்லாத ரயில்களில் ஆட்டோமேட்டிக் டோர் இதுவே முதல் முறை என்பது சிறப்பம்சம் ஆகும்.

வழி மற்றும் அட்டவணை

வழி மற்றும் அட்டவணை

மழைக்காலம் இல்லாத போது மும்பை - கார்மாலி (கோவா) வழித்தடத்தில் வாரம் ஐந்து நாட்களும், மழைக் காலத்தின் போது வாரத்திற்கு மூன்று நாட்களும் தாதர், தானே, பன்வெல், ரத்னகிரி மற்றும் குடால் நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தம் அளிக்கப்படும்.

கொள்ளளவு

கொள்ளளவு

20 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 56 நபர்கள் அமரக்கூடிய ஒரு ஏசி சேர் கார் பெட்டி மற்றும் 78 நபர்கள் அமர்ந்து பயணிக்கக் கூடிய 12 ஏசி சேர் கார் பெட்டியும் இருக்கும்.

கட்டணம்

கட்டணம்

எக்சிகியூடிவ் சீட் கட்டண, உணவுடன் 2,680 ரூபாய், உணவு இல்லாமல் 2,525 ரூபாய் என ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. ஏசி சேர் கார் பெட்டிகளில் உணவுடன் பயணிக்க 1,280 ரூபாயும், உணவு இல்லாமல் 1,155 ரூபாயும் கட்டணங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் எப்போது ரயிலில் வழங்கப்படும் பிற கேட்டரிங் சேவைகளும் வழங்கப்படும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அதிவேக ரயில் என்பதால் சஸ்பென்ஷன் அமைப்பு, தீ தடுப்பு அமைப்பு, புகை மற்றும் தீ கண்டறிதல் போன்ற பாதுகாப்பு முறைகள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் பயணிகளுக்கான ஜிபிஎஸ் காட்சி அமைப்பு திரையும் பொருத்தப்பட்டு இருக்கும்.

பிரெயில் உதவி

பிரெயில் உதவி

பார்வை இல்லா பயணிகளுக்காக இந்த ரயிலில் பிரெயில் உதவி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

சுத்தம்

சுத்தம்

ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை வசதி உள்ளது, அது மட்டும் இல்லாமல் கை உழர்த்திகள், நீர் நிலை குறிகாட்டி மற்றும் டச் பட்டன் தண்ணீர் சேவைக் குழைகள் உடன் பிற அம்சங்களும் உள்ளன.

பொதுமக்கள் வரவேற்பு

பொதுமக்கள் வரவேற்பு

தேஜாஸ் ரயில் அறிமுகம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக மத்திய ரயில்வே கூறியுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய நிமிடங்களில் 207 பயணிகள் டிக்கெட் புக் செய்துள்ளனர் என்றும் அதில் 207 நபர்கள் ஏசி சேர் கார் சீட்டிற்கும், 10 நபர்கள் எக்சிகியூடிவ் வகுப்பிற்கும் என்றும் மத்திய ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் ஷேலேந்திர குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+