இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ நிறுவனத்தின் மலிவான கட்டண அறிவிப்புக்குப் பின், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணத்தைக் குறைத்துள்ளது. இதனால் டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் அதிகளவில் குறைந்துள்ள நிலையில் தற்போது புதிய வர்த்தகத்தைத் தேடி வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி
இதன் படி நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள், ஹோம் ஆட்டோமேஷன், ஹெல்த்கேர், கிளவுட் மற்றும் எனர்ஜி மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் களமிறங்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்பது டெலிகாம் நிறுவனங்களின் திட்டம்.
போட்டி
இந்திய டெலிகாம் சந்தை ஏற்கனவே போட்டி மிகுந்த சந்தை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், 3ஜி மற்றும் 4ஜி சேவையின் அறிமுகத்திற்குப் பின் டெலிகாம் நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனுடன் ஜியோவின் மலிவான சேவைகள் இந்திய டெலிகாம் சந்தையை முழுமையாக மாற்றியுள்ளது.
200 பில்லியன் டாலர்
உலகளாவிய டெலிகாம் வர்த்தகச் சந்தை 2020ஆம் ஆண்டுக்குள் 200 பில்லியன் டாலரை எட்டும் நிலையில் உள்ளது. இதில் அமெரிக்காவின் வர்த்தகத்தை இந்தியாவுடன் ஆசிய பசிபிக் பிராந்தியம் பின்னுக்குத் தள்ளும் நிலையில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய டெலிகாம் நிறுவனங்களின் புதிய வர்த்தகத் தேடல் இந்திய டெலிகாம் சந்தையை மேலும் வலிமையாக்கும்.
வளர்ச்சி
உலகளவில் இந்திய டெலிகாம் சந்தை சுமார் 13.7 சதவீதம் வரை ஒவ்வொரு வருடமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் தற்போது ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் ஆகியவை முக்கிய நிறுவனங்களாக உள்ளது.


Click it and Unblock the Notifications