இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பிரிவில் கொடிகட்டி பறக்கும் பேடிஎம் நிறுவனம் மே 23(இன்று) தனது பேமெண்ட்ஸ் வங்கி வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
ஆன்லைன் சந்தையைப் போலவே போட்டி மிகுந்த இத்துறையில் அடுத்த 3 வருடத்தில் 50 கோடி வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ளது.
4 சதவீத வட்டி..!
சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் மிகப்பெரிய முதலீட்டில் இயங்கும் பேடிஎம், புதிதாகத் துவங்கியுள்ள பேமெண்ட்ஸ் வங்கியின் வைப்புத் திட்டத்திற்குச் சதவீத வட்டியை அளிக்க முடிவு செய்துள்ளது.
இலவசம்
தற்போது வங்கிகள் அனைத்தும் பரிமாற்றத்திற்குக் கட்டணத்தை வசூலித்து வரும் நிலையில் பேடிஎம் நிறுவனம் அனைத்து இணைய வழி பரிமாற்றத்தையும் இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளது. மேலும் டெப்பாசிட் செய்வோருக்கு கேஷ்பேக் ஆஃப்ரும் அளிக்கிறது.
400 கோடி ரூபாய்
இப்புதிய பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்காகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும் இந்த முதலீட்டுத் தொகை அடுத்தச் சில வருடங்களில் 1000 கோடி வரை உயரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிளைகள்
பேடிஎம் பேமெண்ட் வங்கி முதல் வருடத்தில் மட்டும் சுமார் 31 வங்கிகளை, 3000 வாடிக்கையாளர் சேவை முனைகள் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்ததுள்ளது.
பேமெண்ட்ஸ் வங்கி
பொதுவாகப் பிற வங்கிகளைப் போல் அல்லாமல் பேமெண்ட்ஸ் வங்கிக் கடன் அளிக்க முடியாது, ஆனால் வங்கிகள் அளிக்கும் அனைத்து விதிமானச் சேவைகளையும் இந்தப் பேமெண்ட்ஸ் வங்கி அளிக்க முடியும்.
சமீபத்தில் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவங்கியது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications