நாசாவிற்கு 19.1 பில்லியன் டாலர் பட்ஜெட் ஒதுக்கீடு.. டிரம்ப் அரசு அசத்தல்..!
செவ்வாய்க்கிழமை டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு 2018ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டது.
இதில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் NASA அமைப்பிற்கு இந்த வருடம் சுமார் 19.1 பில்லியன் டாலர் அளவிலான நிதியை அமெரிக்க அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ளது.

இந்த நிதிஒதுக்கீடு நாசா அமைப்பின் கணிப்புகளை விடச் சற்று குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. நாசா 2018ஆம் ஆண்டிற்கு 19.3 பில்லியன் டாலர் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்த்த நிலையில் 19.1 பில்லியன் டாலர் நிதிஒதுக்கீட்டை அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.
மேலும் இதுகுறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார், நாசாவின் தற்போதைய நிர்வாகத் தலைவர் ராபர்ட் லைட்ஃபூட்.


Click it and Unblock the Notifications