சென்னை: பட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் இண்டிகோ நிறுவனம் சென்ற ஆவர்ம் 851 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்த சில நாட்களில் 899 ரூபாய் முதல் டிக்கெட் கட்டணங்கள் அறிவித்து மாற்றொரு ஆஃபரை அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தில் இந்தக் குறைந்த சலுகை விலையான 899 ரூபாய் விலை கட்டணத்தில் மே 28-ம் தேதி வரை டிக்கெட் புக் செய்து ஜூன் 26 முதல் 2018 மார்ச் 24 வரை பயணம் செய்யலாம்.
ஆஃபர் டிக்கெட் எங்குக் கிடைக்கும்?
இண்டிகோ நிறுவனத்தின் இந்தச் சலுகை விலை டிக்கெட்களை அவர்களது அனைத்து முன்பதிவு சேனல் கவுண்டர்களிலும், இணைதளத்திலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
வழித்தடங்கள்
சென்னை, கோவா, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, மும்பை, புனே, ஸ்ரீநகர் மற்றும் விசாகப்பட்டினம், அகர்தலா, சண்டிகர், கோயம்புத்தூர், டெஹ்ராடூன், மதுரை, மங்களூர், போர்ட் பிளேர், பாட்னா, வாரணாசி ஆகிய இடங்களுக்கான பயணங்களுக்கு இண்டிகோ சலுகை அளிக்கின்றது.
899 ரூபாய் சலுகை
899 ரூபாய்க்கு இண்டிகோ நிறுவன இணையதளத்தில் ஜம்மூ-ஸ்ரீநகர் பயணம் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ள நிலையில் 794 ரூபாய்க்கு ஜூலை மாதம் டிக்கெட் கிடைக்கின்றது.
கோயம்புத்தூர் - சென்னை - மதுரை
சென்னை-கோயம்புத்தூர் செல்ல 1,169 ரூபாய் டிக்கெட் கட்டணமும், மதுரையில் இருந்து சென்னை செல்ல 1,179 ரூபாய் டிக்கெட் கட்டணங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற வழித்தடங்களில் உள்ள சலுகை
ஸ்ரீநகர்-ஜம்மு செல்ல 999 ரூபாயிலும், டெல்லி ஜெய்ப்பூர் செல்ல 1,089 ரூபாயிலும், விஷாகபட்டிணம் - ஹைதராபாத் செல்ல 1,104 ரூபாயிலும், விஷாகபட்டிணம் ஹைதராபாத் செல்ல 1,165 ரூபாய் எனவும், பெங்களூரு-ஹைதராபாத் செல்ல 1,250 ரூபாய் எனவும் டிக்கெட் கட்டணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதான் சேவை
இண்டிகோ நிறுவனம் பிரதம மந்திரியின் உதான் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட சிறு நகரங்களுக்குச் சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
ஜிஎஸ்டி
உள்நாட்டு விமானப் பயணங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ஜூலை 1 முதல் அறிமுகப்படுத்த இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் எக்கானமி வகுப்பு டிக்கெட்களுக்கு 6 சதவீதமாக இருந்த வரியை 5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
விமான டிராப்பிக்
ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 15.15 சதவீதம் உயர்ந்து 91.34 லட்சமாக உயர்ந்துள்ளது என விமானப் போக்குவரத்து இயக்குனர் டி.ஜி.சி.ஏ (சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) தெரிவித்துள்ளது.
பிற நிறுவனங்களில் ஆஃபர்
ஏர் இந்தியா, ஏர் ஏசியா, ஜெட் ஏர்வேஸ், கோஏர், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களும் விமானக் கட்டணத்தில் இண்டிகோ போன்று பல சலுகைகளை அறிவித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications