4 உயர் அதிகாரிகளுக்கு ரூ.14 கோடி சம்பளம்.. அதிர்ந்துபோன இன்போசிஸ் ஊழியர்கள்..!

நாட்டின் 2வது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் வருடாந்திர அறிக்கையில் இந்நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்களின் செலவின குறைப்பு, வர்த்தகப் பாதிப்பு, வருவாய் சரிவு எனப் பல காரணங்களுக்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதில் இன்போசிஸ் நிறுவனமும் சேர்ந்துள்ள நிலையில் இந்நிறுவனத்தில் உயர் அதிகாரிகளுக்குச் செயல்திறனுக்காக அளிக்கப்படும் இன்சென்டீவ் அளவீட்டை கடந்த வருடத்தை விடவும் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

4 உயர் அதிகாரிகள்

4 உயர் அதிகாரிகள்


வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி இன்போசிஸ் நிறுவனத்தில் ராஜேஷ் மூர்த்தி, சன்தீப் டட்லானி, மோஹித் ஜோஷி மற்றும் துணை தலைமை செயலதிகாரியான ரவி குமார் ஆகியோருக்கு 14 கோடி ரூபாய் என்ற வருடாந்திர சம்பளத்தை அளித்துள்ளது.

பங்குகள்

பங்குகள்

இந்த அளவீடு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகம், இந்த உயர்வு அனைத்தும் செயல்திறன் அடிப்படையிலான பங்குகள் ஊக்கதொகையில் கீழ் இன்போசிஸ் வழங்கியுள்ளது.

இந்தப் பங்குகளை அடுத்த 4 வருடத்தில் அளிப்பதாகவும் இன்போசிஸ் நிர்வாகம் இவர்களுக்கு உறுதி அளித்துள்ளது.

 

சம்பளம்

சம்பளம்

இன்போசிஸ் நிர்வாகத்தில் வளர்ச்சியை மையமாகக் கொண்டு சம்பளத்தை நிர்ணயம் செய்யப்படும் டூல், நிர்வாக அதிகாரிகளின் சம்பள உயர்வை வேரியபில் பே மற்றும் ஸ்டாக் இன்சென்ட்வ் ஆகியவற்றில் பிரித்து அளிக்கிறது.

பிரவின் ராவ்

பிரவின் ராவ்

சமீபத்தில் இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியான யுபி பிரவின் ராவ் அளிக்கப்பட்ட சம்பள உயர்வு மிகவும் அதிகம் என இந்நிறுவனத்தின் நாராயாணமூர்த்தித் தலைமையிலான நிறுவனர் குழு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.

பிரவின் ராவ்-இன் மொத்த சம்பளம் 8.14 கோடியில் இருந்து 11.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

பணிநீக்கம்

பணிநீக்கம்

இந்த 4 உயர் அதிகாரிகள் தலைமை வகிக்கும் பிரிவுகள் கடந்த வருடம் சிறப்பாக இயங்கி வந்த காரணத்தினால் தான், செயல்திறன் அடிப்படையில் வருடத்திற்கு 14 கோடி ரூபாய் வரையிலான சம்பள உயர்வை பெற்றுள்ளனர்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பரிவுகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

தற்போது ஐடி நிறுவனங்களில் நடந்து வரும் பணிநீக்கம் அனைத்தும் தனிநபரின் செயல்திறன் அடிப்படையிலானது, ஆகவே இதற்கும் பரிவின் வர்த்தகத்திற்கும் எவ்விதமான சம்பந்தமுமில்லை.

 

ராஜேஷ் மூர்த்தி

ராஜேஷ் மூர்த்தி

இன்போசிஸ் நிறுவனத்தின் ராஜேஷ் மூர்த்தி என்று அழைக்கப்படும் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகத் தலைவராக மட்டும் இல்லாமல் பல முக்கியப் பரிவுகளின் தலைவராக உள்ளார்.

இவர் எனர்ஜி, யுடிலிட்டீஸ், டெலிகாம் மற்றும் சேவை பிரிவுகளின் தலைவராகவும், கன்சல்டிங் பிரிவின் தலைவராகவும், ஐரோப்ப சந்தையில் வர்த்தகத் தலைவராகவும் உள்ளார்.

இந்த வருடம் இவருக்கு அளிக்கப்பட்ட சம்பள உயர்வு மூலம் இவரின் சம்பள உயர்வு 14.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

மோஹித் ஜோஷி

மோஹித் ஜோஷி

மோஹித் ஜோஷி இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

மேலும் இவர் கட்டுப்பாட்டில் பாங்கிங், பைனாசியல் சர்வீசஸ் மற்றும் இன்சூரன்ஸ், ஹெல்த்கேர் மற்றும் லைப் சையின்ஸ் ஆகிய பிரிவுகள் உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்போசிஸ் நிறுவனத்தின் பிரேசில் மற்றும் மெக்சிக்கோ சந்தைகளின் தலைவராகவும் உள்ளார்.

இவரது சம்பளம் 9.02 கோடியில் இருந்து 14.62 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

 

சந்தீப் டட்லானி

சந்தீப் டட்லானி

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சந்தீப் டட்லானி, உற்பத்தி, ரீடைல், சிபிஐி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவின் குளோபல் தலைவராக உள்ளார்.

மேலும் இவர் இன்போசிஸ் அமெரிக்காவின் தலைவராகவும், Edgeverve நிறுவனத்தின் சேர்மேன் ஆகவும், இன்போசிஸ் பவுண்டேஷன் அமெரிக்காவின் டிரஸ்டியாகவும் உள்ளார்.

சந்தீப் டட்லானி சம்பளம் இந்த வருடம் 8.4 கோடியில் இருந்து 14.97 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

ரவி குமார்

ரவி குமார்

இன்போசிஸ் நிறுவனத்தின் துணை செயல் அதிகாரியாக இருக்கும் ரவி குமார் அவர்களின் சம்பளம் 8.27 கோடி ரூபாயில் இருந்து 14.87 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 ஊழியர்கள்

ஊழியர்கள்

உயர் அதிகாரிகள், நிர்வாகத் தலைவர்கள் என அனைவருக்கும் சம்பள உயர்வு குறித்து அறிவிப்புகளை இன்போசிஸ் நிர்வாகம் அறிவித்து வரும் நிலையில் தனது அடிமட்ட ஊழியர்களின் சம்பள உயர்வை ஜூலை மாதம் வரை ஒத்துவைத்துள்ளது.

இது என்னடா கொடுமை..??

 

 விடா முயற்சி

விடா முயற்சி

ஐஐடி மாணவர்கள்!!

ஐஐடி மாணவர்கள்!!

சியர்ஸ் கேர்ள்ஸ்

சியர்ஸ் கேர்ள்ஸ்

சரவணபவன்

சரவணபவன்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+