டாடா மோடார்ஸ் நிறுவனம் 2017 மார்ச் 31 வரையிலான 4 வது காலாண்டு அறிக்கையைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் 2015-2016 ஆம் நிதி ஆண்டு 4 வது காலாண்டில் பெற்ற 5,211 கோடி ரூபாய் நிகர லாபத்தை விட 2016-2017 நிதி ஆண்டுக் காலாண்டில் நிகர லாபம் 4,336 கோடியாகச் சரிந்துள்ளது.
சென்ற ஆண்டு 81,080 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 78,981 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
நிதி ஆண்டின் நிகர லாபம்
2017 மார்ச் 31-ம் தேதியோடு முடிந்த நிதி ஆண்டின் நிகர லாபம் சென்ற ஆண்டின் 11,678 கோடி ரூபாயில் இருந்து 35 சதவீதம் சரிந்து 7,557 கோடியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வருவாய்
அதனால் சென்ற ஆண்டு 2,78,546 கோடியாக இருந்த மொத்த வருவாய் 2,75,247 கோடியாகக் குறைந்துள்ளது.
ஜாகுவார் லாண்ட் ரோவர் வர்த்தகம்
அதே நேரம் டாடா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் லாண்ட் ரோவர் வர்த்தகம் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஜாகுவார் லாண்ட் ரோவரின் மார்ஜின் 14.5 சதவீதமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜேஎல்ஆர் மார்ஜின் ஆச்சர்யமாக உள்ளது என்று ஷேர்கான் தெரிவித்துள்ளது.
ஜாகுவார் லாண்ட் ரோவரின் அதிக மார்ஜினுக்குக் காரணம்
ஜேஎல்ஆர் நிறுவனத்தின் மார்ஜின் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக ஃபோரெக்ஸ் உடன் இணைந்து செயல்படுவது என்கின்றனர்.
லாபம் சரிந்து பங்குச் காப்பாற்றிய பங்குச் சந்தை
செவ்வாய்க்கிழமை லாபம் சரிந்துள்ளதாக அறிவித்த போதிலும் டாடா மோடார்ஸ் நிறுவனத்தில் பங்குகள் விலை 5 சதவீதம் வரை உயர்ந்தே வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications