ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்.. காரணம் ஜியோ..!
இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனத்திற்கு தேவையான அளவிற்கு இன்டர்கனெக்ஷன் பாயின்ட்களை அளிக்காத காரணத்திற்காக டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் முக்கிய நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
டிராய் வெளியிட்டி அறிவிப்பின் படி ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு சுமார் 3,050 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை எழுப்பிய கோரிக்கையை ஏற்று டிராய் இன்டர்கனெக்ஷன் பாயின்ட் குறித்து ஆய்வு செய்து இந்த 3 நிறுவனங்களும் வேண்டுமென்றே PoIs அளிக்காமல் ஜியோ வாடிக்கையாளர்களின் அழைப்புகள் ஏற்காமல் தடைசெய்துள்ளது உறுதியாகி தற்போது இந்த அபராதத்தை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications