சியோமி நிறுவனம் மே 20-ம் தேதி இந்தியாவின் முதல் நேரடி விற்பனை மையமான எம்ஐ ஹோம் என்ற கடையைப் பெங்களூருவில் உள்ள பீன்க்ஸ் மாலில் திறந்து ஆப்லைன் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் கால் பதித்தது.
சியோமி எம்ஐ ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் வர்த்தக நேரமான 12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. எனவே நாம் இங்குச் சியோமி எம்ஐ ஹோம் ஸ்டோரில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று இங்குப் பார்ப்போம்.
அலைமோதிய கூட்டம்
எம்ஐ ஹோம் கடையைத் திறந்த ஒரு நாளில் மட்டும் 10,000 வாடிக்கையாளர்கள் சியோமியின் மொபைல் போன்கள், சுற்றுச்சூழல் தயாரிப்புகள், மற்றும் பிற உபகரணங்கள் வாங்க வந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிலர் விமானத்தில் பறந்து வந்து பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
முதல் நாளில் அதிகம் விற்பனையான மொபைல் போன்கள்
எம்ஐ ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்ட முதல் நாளில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ரெட்மி 4, ரெட்மி 4 ஏ, ரெட்மி நோட் 4 போன்ற ரெட்மி ஃபோன்களை வாங்கவே வந்துள்ளனர்.
பிற தயாரிப்புகள்
ஆடியோ உபகரணங்கள், எம்ஐ விஆர் பிளே, எம்ஐ ஏர் பியூரிஃபையர் 2, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எம்ஐ ரவுட்டர் 3சி மற்றும் எம்ஐ பேண்டு 2 ஆகிய பொருட்களும் முதல் நாளன்று அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 4
2017-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் ஜே2 இரண்டு மாடல் போனை பின்னுக்குத் தள்ளி ரெட்மி நோட் 4 விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
வேகமான வளர்ச்சி
சீனா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் வெற்றி பெற்ற பிறகு 5 வது நாடாக இந்தியாவில் எம்ஐ ஹோம் ஸ்டோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஐ ஹோம் ஸ்டோரில் கிடைக்கும் பொருட்கள்
சியோமி நிறுவனத்தின் தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், பவர் பேங்க், ஹெட் போன், ஃபிட்னஸ் பேண்ட்கள், ஏர் பியூரிஃபைர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தயாரிப்பு பொருட்களும் கிடைக்கும்.
விரைவில் பிற மெட்ரோ நகரங்களில்
வரும் நாட்களில் இரண்டு ஆண்டிற்குள் சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் தங்களது 100-க்கும் மேற்பட்ட எம்ஐ ஹோம் ஸ்டோர்களைத் திறக்க சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications