இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 ரூபாயாக குறையும்.. அடித்து சொல்கிறார் டோனி சீபா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மூலம் மொத்த உலகமும் பெட்ரோல்-ஐ நம்பி இயங்கும் நிலை முழுமையாக மாறும், இதனால் பெட்ரோல் தேவை அதிகளவில் குறைந்து ஒரு லீட்டர் 30 ரூபாயாகக் குறையும். இந்த மாற்றம் எல்லாம் வெறும் 5 வருடத்தில் நடக்கப் போகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

இது நிச்சயம் நடக்கும் என டோனி சீபா அடித்துச் சொல்கிறார். யார் இவர்..?

சோலார் எனர்ஜி

சோலார் எனர்ஜி

சில வருடங்களுக்கு முன்பு சோலார் எனர்ஜி மற்றும் மின்சாரம் பற்றி யாராவது பேசினால் நாம் சிரிப்போம். ஆனால் டோனி சீபா உலகில் பிற எல்லா மின்சாரங்களை விடவும் சோலார் எனர்ஜி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும். இதுவே புதிய சக்தியாக விளங்கும் எனக் கூறினார்.

இது தற்போது நடந்து வருகிறது. கடந்த 5 வருடத்தில் சோலார் எனர்ஜி-யின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இவை அனைத்தையும் சரியாகக் கணித்தார் டோனி சீபா.

 

டோனி சீபா

டோனி சீபா

American futurist ஆக இருக்கும் டோனி சீபா சிலிக்கான் வேலியின் தொடர் தொழில் வல்லுனராக இருக்கிறார். மேலும் ஸ்டான்போர்டு பல்கலைகழத்தில் பிஸ்னஸ் குறித்து ஆய்வு, ஆராய்ச்சி, கணிப்பு எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கணிப்பு உண்மையாகுமா..?

கணிப்பு உண்மையாகுமா..?

சோலார் எனர்ஜி குறித்து டோனி சீபா-வின் கணிப்பு உண்மையான நிலையில், தற்போது கச்சா எண்ணெய் குறித்து இவர் வெளியிட்டுள்ள கணிப்புகள் உண்மையாகுமா என்ற கேள்வி எழுகிறது.

சரி எதை வைத்து டோனி சீபா தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது கணிப்பில் என்ன இருக்கிறது..? வாங்க பார்ப்போம்.

 

செல்ப்-டிரைவ் கார்ஸ்

செல்ப்-டிரைவ் கார்ஸ்

உலகளவில் செல்ப்-டிரைவ் கார்ஸ் அறிமுகம் மற்றும் அதன் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

செல்ப்-டிரைவ் கார்ஸ் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரிக்கும் போது கச்சா எண்ணெய்-யின் தேவை அதிகளவில் குறையும். இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 25 டாலராகக் குறையும்.

 

தேவை அளவில் சரிவு

தேவை அளவில் சரிவு

அதேபோல் 2021-2020ஆம் ஆண்டுகளில் கச்சா எண்ணெய் தேவை 100 மில்லியன் பேரல் ஆகக் குறையும், அதன் பின் அடுத்த 10 வருடங்களில் இதன் அளவு 70 மில்லியன் பேரலாகக் குறையும். இதனால் இதன் விலை சராசரியாக 25 டாலரை அடையும் எனச் சீபா தெரிவித்துள்ளார்.

பெஸ்ட் கார்

பெஸ்ட் கார்

மேலும் இந்தச் செல்ப்-டிரைவ் கார்களை இயக்குவதும் சரி, பயன்படுத்துவதும் சரி மிகவும் எளிமையானது. தற்போதைய நிலையில் இதன் விலை அதிகமாக இருந்தாலும் இதனை வாங்கிய பின் இதற்கு ஆகும் செலவுகள் மிகவும் குறைவு. இதுமட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் அது மேம்பட்டுக்கொண்டே இருக்கும் காரணத்தால் இதன் விலை நாளிடைவில் குறையும் என்பது உறுதி.

இது முழுவதும் மின்சாரத்தில் மூலம் இயங்கும் காரணத்தால் ஆட்டோமொபைல் துறையில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை குறையும்.

 

இந்தியாவில்

இந்தியாவில்

2030ஆம் ஆண்டில் இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும் மின்சாரம் மூலம் இயங்கும் என மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி பெருங்காயம்..

எல்ஜி பெருங்காயம்..

அட! அதற்கு இது தான் அர்த்தமா..?அட! அதற்கு இது தான் அர்த்தமா..?

மனசாட்சி இல்லாத செயல்..!

மனசாட்சி இல்லாத செயல்..!

பெண்களைக் குறிவைக்கும் காக்னிசென்ட்.. மனசாட்சி இல்லாத செயல்..!பெண்களைக் குறிவைக்கும் காக்னிசென்ட்.. மனசாட்சி இல்லாத செயல்..!

அரசு ஊழியர்களும் பணிநீக்கம்

அரசு ஊழியர்களும் பணிநீக்கம்

ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..!ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol price could be below Rs30 a litre in 5 years

Petrol price could be below Rs30 a litre in 5 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X