அனில் அம்பானிக்கு ஓகே சொன்ன செபி.. பங்குச்சந்தையில் இறங்கும் ரிலையன்ஸ் இன்பரா..!
அனில் அம்பானி தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் இன்பரா-வின் முதலீட்டு டிரஸ்ட் அமைப்பான ரிலையன்ஸ் இன்பாரஸ்டக்சர் InvIT பண்ட் நிறுவனம் பங்குச்சந்சையில் இறங்க செபி இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் IRB, ஸ்ரெட்லைட் நிறுவனத்திற்கு அடுத்து 3வது முதலீட்டு டிரஸ்ட் நிறுவனமாக ரிலையன்ஸ் இன்பரா இறங்குகிறது.

இந்நிறுவனத்தின் ஐபிஓ மூலம் சுமார் 2,500 கோடி ரூபாய் வரை முதலீட்டை ஈர்க்க ரிலையன்ஸ் இன்பரா முடிவு செய்துள்ளது. ஜூன் மாத துவக்கத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் 3,000 கோடி ரூபாய் முதலீட்டு ஈர்க்கும் திட்டத்துடன் ரிலையன்ஸ் இன்பரா விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த நிலையில், செபி அதனை நிராகரித்தது. இதன் பின்னரே 2,500 கோடி ரூபாய் என்ற முதலீட்டுத் திட்டத்துடன் அனுமதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications