2016-ம் ஆண்டு ஒரு நாளைக்கு 1.32 லட்சம் ரூபாய்ச் சம்பளமாகப் பெற்ற ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சார் 2017-ம் ஆண்டு 63.8 சதவீத சம்பள உயர்வுடன் ஒரு நாளைக்கு 2.1 லட்சம் ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார்.
அது மட்டும் இல்லாமல் செயல்திறன் போனஸ் தொகையாக 2.20 கோடி ரூபாயும் 2016-ம் ஆண்டு 4.76 கோடியாக இருந்த ஆண்டுச் சம்பளம் 7.85 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
அடிப்படை சம்பளம், ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஊக்கத்தொகை மற்றும் வருவாய், ஊதியம் மற்றும் கொடுப்பனவு நிதி பங்களிப்பு ஆகியவை இந்தச் சம்பள தொகையில் அடங்கும்.
பணியாளர் பங்கு விருப்பங்கள்
இந்தச் சம்பளம் மட்டும் இல்லாமல் ஊழியர்கள் பங்காக 13.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகள் வழங்குவதற்கான அனுமதியை ஆர்பிஐ இன்னும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னேற்றம்
2016-ம் ஆண்டு எச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி 9.7 கோடி ரூபாய் சம்பளத்துடன் முதல் இடத்திலும், ஆக்ஸிஸ் வங்கி தலைவர் ஷிக்கா ஷர்மா 5.5 கோடி ரூபாயுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்து இருந்தனர். அதே நேரம் சென்ற ஆண்டு 4.79 கோடி ரூபாயுடன் மூன்றாம் இடத்தில் இருந்த சந்தா கோச்சார் 2017-ம் ஆண்டு 7.85 கோடி ரூபாய் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
போனஸ் மற்றும் பிற சலுகைகள் இல்லாமல் சந்தா கோச்சார் அவர்களின் சம்பளம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது.
சம்பள உயர்வு இல்லாத 2016
ஐசிஐசிஐ வங்கி 2016-ம் ஆண்டு மார்ச் மாத காலாண்டின் போது 87 சதவீதம் நிகர லாபம் சரிந்ததால் முத்த அதிகர்களுக்குச் செயல்திறன் போனஸ் மற்றும் சம்பள உயர்வை அளிக்கவில்லை. ஆனால் 2017-ம் ஆண்டு நல்ல போனஸ் போற்றுள்ளார்கள்.
ஊழியர்களின் சம்பள உயர்வு
2017-ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கி ஊழியர்களின் சம்பளம் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூத்த நிர்வாகத் தலைவர்களின் சம்பளம்
ஐசிஅசிஐ வங்கி மூத்த நிர்வாகத் தலைவர்களுக்கான சம்பளத்தையும் 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
நிர்வாக இயக்குனர் என்.எஸ். கண்ணன்
நிர்வாக இயக்குனர் என்.எஸ். கண்ணனின் மொத்த சம்பளம் 5.39 கோடியாக உயர்ந்துள்ளது. 62 சதவீதம் உயர்ந்துள்ள இவர் 2016-ம் ஆண்டு 3.32 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்று வந்துள்ளார். இவருடைய அடிப்படை சம்பளம் 15 சதவீதம் 1.76 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
விஷாகா முலே
டிசம்பர் 2015-ம் ஆண்டு நிர்வாக இயக்குனராக வேலைக்குச் சேர்ந்த விஷாகா முலேவிற்கும் 5.39 கோடியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications