பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவையில் ஒரு சில திட்டங்களுக்கு மட்டும் 1,000 ஜிபி வரை இலவச தரவை அளிக்கின்றது. இதற்காக ஏர்டெல் இணையதளத்தில் உள்ள பிராட்பேண்ட் திட்டங்களில் போனஸ் ஆஃபர் என்ற சலுகையை அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்தப் போனஸ் ஆஃபர் மே 16ம் தேதிக்குப் பிறகு முதல் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் கிடைக்கும்.
சென்ற வாரம் ஏர்டெல் நிறுவனம் தனது நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்களில் 100 சதவீதம் கூடுதல் தரவை அளித்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்போது மேலும் அதிரடியாகப் போனஸ் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
899 ரூபாய் திட்டம்
899 ரூபாய் பிராட்பேண்டு திட்டத்தில் சென்ற வாரம் வரை 60 ஜிபி தரவை அளித்த ஏர்டெல் நிறுவனம் மே 16 முதல் கூடுதலாக 750 ஜிபி தரவை போனஸ் ஆக வழங்குகின்றது.
1000 ரூபாய் திட்டம்
1,000 ரூபாய் பிராட்பேண்டு திட்டத்தில் 90 ஜிபி தரவுடன் கூடுதலாக 750 ஜிபி தரவை போனஸ் ஆகப் பெறலாம்.
1,299 ரூபாய் திட்டம்
1,299 ரூபாய் பிராட்பேண்டு திட்டத்தில் 125 ஜிபி தரவு மட்டும் இல்லாமல் 1,000 ஜிபி வரை கூடுதலாகத் தரவைப் பெறலாம்.
1,499 ரூபாய் திட்டம்
1,499 ரூபாய் பிராட்பேண்டு திட்டத்தில் 160 ஜிபி தரவு மட்டும் இல்லாமல் 1,000 ஜிபி வரை கூடுதலாகத் தரவைப் பெறலாம்.
1,799 ரூபாய் திட்டம்
1,799 ரூபாய் பிராட்பேண்டு திட்டத்தில் 220 ஜிபி தரவு மட்டும் இல்லாமல் 1,000 ஜிபி வரை கூடுதலாகத் தரவைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications