இந்தியாவின் முன்னணி வங்கி அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர். இதனால் மத்திய அரசு தற்போது என்ன செய்வது என்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் டெலிகாம் துறைக்கு முக்கியப் பங்கு உண்டு என்றால் யாராலும் மறுக்க முடியாது. தற்போது இந்த டெலிகாம் துறையே நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் ஒன்றாக மாறியுள்ளது.
ஆம்.. இதுதான் தற்போதைய உண்மை நிலை..
டைம் பாம்
இந்திய வங்கிகள் டெலிகாம் நிறுவனங்களுக்கு அளித்துள்ள கடன் அளவு சுமார் 8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த டெலிகாம் நிறுவனமும் கடன் சந்தையில் மிதந்து வருகிறது.
மேலும் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு இத்துறைக்கு அளிக்கப்பட்ட கடன் அளவுகளைத் தாண்டி தற்போது டெலிகாம் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்துள்ளது. தற்போது இருக்கும் ரூ.8 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விடவும் சுமார் 2 மடங்கு அதிகமாகும்.
கடன் பங்கீடு
சமீபத்தில் அமைச்சரவை செயலாளருக்கு அளிக்கப்பட்ட மின்னணு அறிக்கையில், வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமான கடன் வழங்கியுள்ளது. மேலும் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்காகவும், அதன் பயன்பாட்டைத் தொடர்ந்து நீட்டிக்கப் பணம் செலுத்தவும் வங்கிகள் பிணையைம் அளிக்கிறது.
இதன் மூலம் வங்கிகளுக்கு டெலிகாம் நிறுவனங்கள் அளிக்கப்பட வேண்டிய கடன் அளவு தற்போது 8 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
கடன்
டெலிகாம் நிறுவனங்களுக்கு வங்கிகள் நேரடி கடனாக 2.63 லட்சம் கோடி ரூபாய், ஸ்பெக்ட்ரம் பேமெண்டுக்காக 3.09 லட்சம் கோடி ரூபாய், 3ஆம் தரப்பு ஆப்ரேட்டர்களுக்கு அளிக்கப்பட்ட கடன் தொகை 1.8 லட்சம் கோடி ரூபாய் எனக் கடன் அளிக்கப்பட்ட தொகை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வருமானத்தில் சரிவு
இந்திய டெலிகாம் துறை தற்போது இருக்கும் நிலையில் 2019ஆம் ஆண்டுகள் இந்நிறுவனங்களின் வருமானம் 25 சதவீதம் குறைந்து 1,31,000 கோடி ரூபாயாகக் குறையும் ஆய்வுகள் கூறும் நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் எப்படிக் கடனை அடைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
டெலிகாம் நிறுவனங்கள்
மேலும் டெலிகாம் நிறுவனங்கள் 20 சதவீதம் ஆப்ரேட்டிங் மார்ஜினுக்கான ஒவ்வொரு வருடமும் போராடி வரும் நிலையில், வருமானத்தை அதிகரிக்க வழியில்லாமல் தவித்து வரும் இத்தகைய சூழ்நிலையில் எப்படிக் கடன் திருப்பிச் செலுத்தும்.
இந்நிலையில் தற்போது பல நிறுவனங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தா முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கி தரப்பு
மலை போல் உயர்ந்து நிற்கும் டெலிகாம் நிறுவனங்களின் கடன் அளவை தீர்க்க வங்கிகள் மத்திய அரசு முக்கிய ஆலோசனைகளையும், வழிகளையும் தெரிவித்துள்ளது.
ஜியோ ஆதிக்கம்
தற்போது டெலிகாம் நிறுவனங்களின் வருமானம் குறைந்ததற்கு ஜியோ மிக முக்கியக் காரணமாகும்.
ஜியோவின் மலிவான கட்டண சேவைகளால் பிற டெலிகாம் நிறுவனங்களும் சந்தையில் தொடர்ந்து நிலைத்திருக்கக் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப அளவுகளும் சரிவடைந்துள்ளது.
எதற்காக இந்தத் திடீர் துவக்கம்..
முகேஷ் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செழிப்பான வர்த்தகத்தையும் வருவாயையும் பெற்று வந்த நிலையில் எதற்காக 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஜியோ நிறுவனத்தை உருவாக்க வேண்டும். என்ன காரணம்..?


Click it and Unblock the Notifications