வெள்ளிக்கிழமை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதைப் பற்றி மட்டும் தான் ஊடகங்கள் குறை கூறுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுக் காலத்தைக் குறிக்கும் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமித் ஷா, இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகைக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதமளிக்க முடியாது என்றார்.
பெருகி வரும் மக்கள் தொகை
125 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் அனைவருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. எனவே நாங்கள் சுய வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கிறோம் என்றார்.
சர்ச்சை கருத்து
இந்தியாவை ஆளும் கட்சியின் தலைவரான அமித் ஷா தொடர்ந்து ஐடி, வங்கி மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் அனைவருக்கும் வேலை அளிப்பது முடியாத காரியம் என்ற இவர் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சிக்கும் எதிர் கட்சிகள் 2013-2014 இல் வேலை வாய்ப்பின்மை 4.9 சதவீதமாக இருந்ததாகவும், இதுவே 2015-2016 நிதி ஆண்டில் 5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
1.52 லட்சம் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை இழப்பு
அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் மத்திய அரசின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லா ரூபாய் நோட்டு அறிவித்த காலக் கட்டத்தில் அதாவது 2016 நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு 1.52 லட்சம் தற்காலிகத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்று ஒரு லேபர் பீரோ ஆவணத்தில் உள்ளதாகச் செய்தித்தாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை
வேலைவாய்ப்பு குறைந்து வருவது குறித்துக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவது குறித்துக் கருத்து தெரிவித்த அமித் ஷா ஒரு வேலை காங்கிரஸ் கட்சி அவர்கள் 10 வருட ஆட்சி காலகட்டத்தில் எந்த அளவு வேலை வாய்ப்பு இருந்த து என்று வெள்ளை அறிக்கை விட்டு இருக்குமா, அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆட்சியைக் கைவிட்டு இருக்க மாட்டார்கள் அள்ளவா என்று கிண்டலாகப் பதில் கூறினார்.
2019 பாஜக
2014-ம் ஆண்டு எப்படிப் பாஜக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்ததோ அதே போன்று 2019-ம் ஆண்டும் அதை விடப் பிரம்மாண்டமான முறையில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications